இந்தியா: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜக கட்சியினை எதிர்கொள்ள எதிர்கட்சிகள் அனைத்தும் கை கோர்த்துள்ளன. இந்த கூட்டணிக்கு‘இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் மொத்தம் 26 கட்சிகள் உள்ளன. ‘இந்தியா’ கட்சியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பிகார் தலைநகர் பாட்னாவில் நடைப்பெற்றது. இதன் இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம் பெங்களூருவில் நடந்தது. இதை தொடர்ந்து இதன் மூன்றாவது கூட்டம் இன்றும் நாளையும் (ஆக., 1 மற்றும் செப்.,1) மும்பையில் நடக்கிறது.  முதல் கூட்டத்தை பீஹார் முதலமைச்சரும் - ஐக்கிய ஜனதா தள நிறுவனருமான நிதீஷ் குமார், இரண்டாவது கூட்டத்தை காங்கிரஸ் கட்சியும் நடத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூன்றாவது கூட்டம்:


இந்தியாவின் மூன்றாவது கூட்டத்தில் இந்த கூட்டணியின் லச்சினை (Logo)வெளியிடப்பட உள்ளது. அது மட்டுமன்றி, இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதில் பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். 


மேலும் படிக்க | "பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா?" எடப்பாடி பழனிசாமி கேள்வி!


மும்பை கூட்டடம் தொடர்பான தகவல்கள்:


>இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் உள்ள கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் நடைபெறுகிறது. 


>இந்த கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்க இருக்கிறார். 


>இந்தியா கூட்டணியில் ஏற்கனவே 26 கட்சிகள் உள்ளன. இந்த நிலையில் இன்னும் 4-5 கட்சிகள் இந்த கூட்டணியில் இணைய தேர்வாகி இருக்கின்றன. அவை அனைத்தும் மாநில கட்சிகள் என தகவல் வெளியாகியுள்ளது. 


>இன்று காலை 6:30 மணியளவில் தொடங்கியுள்ள இக்கூட்டம், நாளை பிற்பகல் 3:30  மணியளவில் முடிவடையும். 


>இந்த கூட்டத்தை உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நடத்துகிறார்.


>தேர்தல் வியூகம், தொகுதிப் பங்கீடு, செயல்திட்டங்கள், கூட்டணியின் தலைவர், ஒருங்கிணைப்பாளர்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என தகவல். 


தமிழ் நாட்டில் அடுத்த கூட்டம்..? 


இன்றும் நாளையும் நடைபெறும் இந்தியா மூன்றாவது கூட்டத்தில், அடுத்த கூட்டத்தை எங்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அடுத்தக் கூட்டத்தை தமிழ்நாட்டில் நடத்துவது குறித்தும் இன்றுபரிந்துரைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 


முதல்வருக்கு முக்கிய பதவி?


புதிதாக இணைந்துள்ள இந்தியா கூட்டணிக்கு சோனியா காந்தி தலைமை வகிக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் அல்லாமல், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனெனில் எதிர் அணியில் இருந்த பல கட்சிகளை, இந்தியா கூட்டணி மூலம் கைக்கோர்க்க ஸ்டாலின் உதவியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஸ்டாலின்-நிதிஷ் குமார் இடையே கடும் போட்டி நிலவலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி எதிரான வழக்கில் விரைவில் இறுதி விசாரணை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ