கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவால் நிறுவப்பட்ட 112 அடி உயரத்தில் ஆதி யோகி சிலை உள்ளது. இந்நிலையில் இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் ஜக்கி வாசுதேவ் மூலம் ஈஷா யோகா மையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழாவிலும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மதுரை மக்கள் செங்கல்லை எடுக்க போறாங்க! கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்!


இந்த ஆண்டு நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்க உள்ளார். விழாவில் பங்கேற்க வரும் 18 ம் தேதி டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் மதுரை வரும் ஜனாதிபதி காரில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். அதன்பிறகு மதுரை விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளம் வந்திறங்கி அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஈஷா யோகா மையம் செல்ல உள்ளார். ஈஷா வளாகத்தில் உள்ள லிங்க பைரவி, தியானலிங்கம், 112 அடி உயரம் உள்ள ஆதியோகி சிலை உள்ளிட்டவற்றை ஜனாதிபதி திரெளபதி முர்மு பார்வையிட்டு சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார். விழாவை முடித்து கொண்டு ஜனாதிபதி திரெளபதி முர்மு சூலூர் விமானப்படை தளம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார். 



இந்நிலையில் தான் ஜனாதிபதி வருகையையொட்டி கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜனாதிபதிக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக ஜனாதிபதியின் சிறப்பு பாதுகாப்பு பிரிவினர் விரைவில் கோவை வருகை தர உள்ளனர். இந்நிலையில் தான் கோவை ஈஷா யோகா மையத்துக்கு ஜனாதிபதி திரெளபதி முர்முவின் வருகையையொட்டி பல இடங்களில் உள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளன. அதன்படி கோவை வடவள்ளி முல்லை நகர் சோதனைச்சாவடி முதல் நரசிபுரம் வரை சாலையில் உள்ள வேகத்தடைகள் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | காதலர் தினத்தை முன்னிட்டு விண்ணைத் தொடும் ரோஜப்பூ விலை! ஒரு பூவின் விலை ₹30!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ