காதலர் தினத்தை முன்னிட்டு விண்ணைத் தொடும் ரோஜப்பூ விலை! ஒரு பூவின் விலை ₹30!

தூத்துக்குடி காதலர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மலர் சந்தைக்கு ஓசூர் பெங்களூர் கொடைக்கானல் ஆகிய பகுதியில் இருந்து ரோஜா பூக்கள் வருகை பூக்களின் வரத்து குறைவாக காணப்படுவதால் ஒரு ரோஜா பூ முப்பது ரூபாய் வரை விற்பனையாகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 12, 2023, 02:23 PM IST
  • காதலர் தினத்தை முன்னிட்டு அன்பை வெளிப்படுத்துவதற்காக மலர்களால் ஆன பொக்கே தயார் செய்யும் பணி.
  • ஆன்லைன் மூலம் பொக்கே ஆர்டர்கள் வந்து குவிந்துள்ளது.
  • காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி.
காதலர் தினத்தை முன்னிட்டு விண்ணைத் தொடும் ரோஜப்பூ விலை! ஒரு பூவின் விலை ₹30! title=

தூத்துக்குடி காதலர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மலர் சந்தைக்கு ஓசூர் பெங்களூர் கொடைக்கானல் ஆகிய பகுதியில் இருந்து ரோஜா பூக்கள் வருகை பூக்களின் வரத்து குறைவாக காணப்படுவதால் ஒரு ரோஜா பூ முப்பது ரூபாய் வரை விற்பனையாகிறது.

காதலர் தினம் வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது காதலர் தினத்தன்று காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்த ஒருவருக்கு ஒருவர் வழங்கிக் கொள்வது பூக்களை மட்டும் தான் அதில் முக்கிய இடம் பிடிப்பது ரோஜா பூக்கள்

காதலர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி பூச்சந்தைக்கு பெங்களூர்,ஓசூர், ஊட்டி கொடைக்கானல் ஆகிய பகுதியிலிருந்து ரோஜா பூக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன ரோஜா பூக்கள் சிகப்பு மஞ்சள் ஆரஞ்சு ரோஸ் உள்ளிட்ட ஏழு வண்ணங்களில் வரவழைக்கப்பட்டுள்ளது மேலும் காரனேசன், ஜெரிபுரா, நிசாந்தம் ஆகிய பூக்களும் அதிக அளவில் வந்து குவிந்துள்ளன.

மேலும் படிக்க | Happy Promise Day 2023: எப்போதும், உன் அருகில் நான் இருப்பேன்... இது சத்தியம்!! ப்ராமிஸ் டே வாழ்த்துக்கள்!!

காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆவதால் குறைந்த அளவான ரோஜா பூக்களே தூத்துக்குடி மலர் சந்தைக்கு  வந்துள்ளது இதனால் 15 ரூபாய் விற்பனையான ஒரு ரோஜா பூ தற்போது முப்பது ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது

மேலும் காதலர் தினத்தை முன்னிட்டு அன்பை வெளிப்படுத்துவதற்காக  மலர்களால் ஆன பொக்கே  தயார் செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது ஆன்லைன் மூலம் பொக்கே ஆர்டர்கள் வந்து குவிந்துள்ளதாக பூ விற்பனையாளர்கள் தெரிவித்தனர். 

மேலும் படிக்க | 12 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன் - குருவின் அபூர்வ சங்கமம்..! மூன்று ராசிகளுக்கு ஜாக்பாட்

மேலும் படிக்க | வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு-சாண்டள தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News