தமிழக சட்டசபை 10 நாள் விடுமுறைக்குப்பின் நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கியது. இதையடுத்து, பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய தமிழக சட்டசபை 10 மணி அளவில் கூடியது. அதில் இன்று பள்ளிப் பாடத்திட்டங்கள் குறித்து எம்எல்ஏ இன்பதுரை எழுப்பிய கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.


அப்போது, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சில அம்சங்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதன்மூலம் அரசியலமைப்பு சட்டம் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.