ராமேஸ்வரம்: தமிழக எல்லைப் பகுதிக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்றைய தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ரமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 2000 பேர், இலங்கை கடைப் படையினரால் விரட்டப்பட்டுள்ளனர், இதனால் இன்று காலை அவர்கள் கரைக்கு திரும்பிதாக மீனவர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.


முன்னதாக நேற்று இலங்கை கடற்படையினர் சுமார் 400 ரோந்து படகுகளில் வந்து இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடித்த இந்திய மீனவர்களை விரட்டியுள்ளனர். 


இவர்கள் கட்சதீவு எல்லைப்பகுதியில் இவ்வாறு நிகழ்ந்ததாக மீனவர் சங்க தலைவர் எமிரிட் தெரிவித்துள்ளார். இதனையடுத்த மீன்பிடிக்க வழியில்லாததால் கடலுக்கு சென்று 2000 மீனவர்களும் இன்று காலை கரைக்கு திரும்பியுள்ளனர்.


முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன்னர், இதேப்போல் இலங்கை கடற்படையினரால் 3000 இந்திய மீனவர்கள் விரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது!