தமிழகத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வ்ராஜ் அப்யான் கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் அவர்கள் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய சந்திப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...



"மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் @ikamalhaasan, ஸ்வ்ராஜ் அப்யான் கட்சியின் தலைவர் திரு.யோகேந்திர யாதவ் அவர்கள் இன்று கட்சித் தலைமை அலுவலகத்தில் சந்தித்து தான் கைது செய்யப்பட்ட போது ஆதரவு அளித்தமைக்கு  நன்றி தெரிவித்தார்". என குறிப்பிடப்பட்டுள்ளது


கடந்த செப்டம்பர் 8-ஆம் நாள் ஸ்வ்ராஜ் அப்யான் கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் கைது செய்யப்பட்டார். 


சேலம் - சென்னை 8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் நடைப்பெற்று வரும் போராட்டத்தில் விவாசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருவண்ணாமலை சென்ற அவரை செங்கம் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 


இந்நிகழ்வின் போது காவல்துறையினர் வலுக்கட்டாயமாக யோகேந்திர யாதவ் அவர்களிஐ கைப்பேசிகளை பிடுங்கி வலுகட்டாயமாக காவல்துறை வாகனத்தில் ஏற்றியது குறிப்பிட்டத்தக்கது.