`மாரிதாஸ் வாழ்க` என நெற்றியில் எழுதிக்கொண்டு வந்த நபர் - காவல்துறை விசாரணை
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு `மாரிதாஸ் வாழ்க` என நெற்றியில் எழுதிக் கொண்டு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
முப்படை ராணுவ தளபதி பிபின் ராவத் இறப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதாக யூடியூபர் மாரிதாஸை, மதுரை காவல்துறையினர் கைது செய்தனர். தேனி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை, தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக இமெயில் மோசடியில் ஈடுபட்டதாக சென்னைக் குற்றப்பிரிவு காவல்துறையினரும் கைது செய்தனர். அடுத்தடுத்த வழக்குகளில் மாரிதாஸ் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது கைதுக்கு எதிராக பா.ஜ.க உள்ளிட்ட கட்சியினர் குரல் கொடுத்தனர்.
ALSO READ | யூடியூபர் மாரிதாஸை டிச.23-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
மாரிதாஸின் கைது உள்நோக்கம் கொண்டது எனவும், திமுகவை விமர்சனம் செய்பவர்களை பழிவாங்கும் நோக்கில் காவல்துறையை ஏவி கைது படலத்தை அரங்கேற்றுவதாகவும் தமிழக பா.ஜ.க தலைவர் குற்றம்சாட்டினார். மேலும், சமூகவலைதளங்களிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று திடீரென வந்த ஒரு நபர், தன்னுடைய நெற்றியில் "மாரிதாஸ் வாழ்க" என்றும், கைகளில் " ஃபாரின் மதவெறி திமுக சிற்றரசு ஒழிக" என்றும் எழுதியிருந்தார்.
ALSO READ | யூடியூபர் மாரிதாஸ் கைது - காரணம் என்ன?
அவரை அழைத்துச் சென்ற காவல்துறையினர், இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் பேரூரைச் சேர்ந்த கந்தசாமி என்பது தெரியவந்தது. தான் அங்கு வந்தது குறித்து விளக்கமளித்த கந்தசாமி, மாரிதாஸ் கைதைக் கண்டிப்பதாகவும், அதேநேரத்தில் எந்தக் கட்சியையும் சேர்ந்தவர் இல்லை என்றும் விளக்கமளித்தார். மேலும், தான் ஒரு இந்தியன் என்ற உணர்வில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருப்பதாகவும் கந்தசாமி தெரிவித்தார். அவரின் வருகையால் சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR