சென்னை : கன மழை காரணமாக நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை சீரமைக்கும் பணிகள் குறித்து மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.ஏ.வ.வேலு அவர்கள் தலைமை செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.  அதன்படி இன்று(16/12/2021) வடகிழக்கு பருவமழை மற்றும் வெள்ளத்தினால் தமிழநாட்டில் நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், அவற்றை சீரமைக்கும்  பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்கள்.  சாலைகளில் ஏற்பட்ட 52 உடைப்புகளில் இதுவரை 49 உடைப்புகள் சரிசெய்யப்பட்டு சீரான போக்குவரத்து உறுதி செய்யப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி!


மீதமுள்ள 3 உடைப்புகளில் தண்ணீர் அதிகமாக செல்வதால் வடிந்தவுடன் இன்னும் 15 தினங்களில் சீர்செய்ய வேண்டுமென மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.  தமிழ்நாட்டில் வெள்ளத்தினால் 32 தரைப்பாலங்கள் பாதிக்கப்பட்டன.  இவற்றுள் 20 தரைப்பாலங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு தங்கு தடையற்ற போக்குவரத்து நடைபெற்று வருகிறது.  மீதமுள்ளவற்றில் வெல்ல நீர் வடிந்தவுடன், போக்குவரத்து உடனடியாக சீர் செய்யப்பட வேண்டுமென மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.  தமிழகத்தில் 12 மாவட்டங்களில் 159 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இவற்றில் 155 இடங்களில் நிலச்சரிவுகளை அகற்றி தற்காலிகமாக மணல் மூட்டைகளை அமைத்து போக்குவரத்திற்கு ஏற்ற முறையில் சீரமைக்கப்பட்டுள்ளது.



மழைநீர் வெள்ளத்தால் சேதமடைந்த 1842 km நீள சாலைகளிகளில் 1518 km நீள சாலைகள், நீர்க்கோப்பு கப்பிகள் கொண்டு உடனடியாக சீரமைக்கப்பட்டுள்ளது.  மீதமுள்ள 24 km நீள சாலைகளை டிசம்பர் மாத இறுதிக்குள் சீரமைக்க வேண்டுமென மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.  தற்காலிக வெள்ள சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.17 கோடியில் உடனடியாக பணிகளை மேற்கொண்டு மீதமுள்ள அனைத்து சேதங்களையும் சீர்செய்யுமாறு அமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.


இந்த ஆய்வு கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு மற்றும் முதன்மை செயலாளர் திரு.தீரஜ்குமார் இ.ஆ.ப, அவர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு தலைமை பொறியாளர் திரு.சந்திரசேகர் அவர்கள் மற்றும் கட்டுமானம் மற்றும்  பராமரிப்பு அலகு கண்காணிப்பு பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.


ALSO READ | TN Rain Update: மீண்டும் ஆரம்பம்; முக்கிய அப்டேட் தந்த வானிலை மையம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR