இன்ஸ்டாகிராம் மோகம் : தந்தை திட்டியதால் வீட்டை விட்டு ஓடிய எட்டாம் வகுப்பு மாணவி
கோவையில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை தந்தை திட்டியதால் அவர் தோழியுடன் மாயமாகியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. அதனால் லேப்டாப், டாப்லெட், மொபைல் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. அதே சமயம் கல்வி கற்பது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் மாணவர்கள் அதிக நேரம் செலுத்தத் தொடங்கினார்கள். குறிப்பாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகள் மாணவர்களின் நேரத்தை தின்றன.
இந்த நிலையில் கோயமுத்தூரை சேர்ந்த எட்டாம் வகுப்பு சிறுமி ஆன்லைன் வகுப்புகள் இல்லாத நேரத்திலும் தொடர்ந்து செல் போனை பயன்படுத்தி வந்துள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவிடுவது அவரது தந்தைக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை போனை பறித்து இன்ஸ்டா உள்ளிட்ட சமூகவலைதள செயலிகளை நீக்கியுள்ளார். போனை தூர வைத்துவிட்டு படிக்குமாறும் தந்தை அவரது மகளை கண்டித்துள்ளார்.
மேலும் படிக்க | மாடுகளை திருடிச்செல்லும் டிப்டாப் திருடர்கள் : சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு..!
இதனால் கோபமுற்ற சிறுமி மறுநாளே மாயமானார். அவருடன் அவரது பள்ளி தோழியும் மாயமானது தெரிய வந்தது. உடனடியாக அவரது தந்தை கோவை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பள்ளி மாணவிகள் இருவரும் சென்னைக்கு ரயில் ஏறி சென்றது தெரியவந்துள்ளது. பின்னர் கோவை காவல்துறை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை தொடர்பு கொண்டு இதுகுறித்து தகவல் தெரிவித்தது. ரயில்வே காவல்துறையினர் மாணவிகள் ரயிலில் இருந்து இறங்கும்போதே அவர்களை பிடித்தனர்.
மாணவிகள் இருவரும் குழந்தைகள் நல ஆர்வலர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள். இருவரையும் கோவை அழைத்துவர நடவடிக்கை ஏடுக்கப்பட்டு வருகிறது. தந்தை திட்டியதால் சிறுமிகள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளி மாணவிகளுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் தேவை என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றது.
மேலும் படிக்க | பெண்ணிடம் சில்மிஷம் - போலீஸ் காலில் விழுந்து தப்பிக்க முயன்ற இளைஞர்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR