சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் மாணவர்களை முகக்கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் தங்கள் மாணவர்களை முகக்கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி கல்வி நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.




காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் சுகாதார நிலையங்களை அணுகி RTPCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சென்னையில் கடந்த சில நடகளாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் தற்போது திறந்துள்ள நிலையில், தொற்று பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசங்களை அணிய வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. 


 மேலும் படிக்க | எந்த அறிகுறி இருந்தாலும் மருத்துவமனைக்கு செல்லுங்கள் - சுகாதாரத் துறை அமைச்சர் அறிவுறுத்தல்


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 552 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  34,58,997 ஆக உயர்ந்துள்ளது. 



புதன்கிழமை அன்று 3 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிர் இழந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது. தஞ்சாவூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த ஒரு இளம்பெண் உயிரிழந்துள்ளார். அவருக்கு எந்தவித இணைநோயும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 2,313 ஆக உள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 177 ஆக உள்ளது. இதுவரை தொற்றிலிருந்து மொத்தம் குணமானவார்களின் எண்ணிக்கை 34,18,658 ஆக உள்ளது. 


தமிழகத்தில் நேற்று பதிவான மாவட்ட அளவிலான கொரோனா பாதிப்பு பட்டியல் இதோ:



மேலும் படிக்க | தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR