எந்த அறிகுறி இருந்தாலும் மருத்துவமனைக்கு செல்லுங்கள் - சுகாதாரத் துறை அமைச்சர் அறிவுறுத்தல்

காய்ச்சல், சளி என எந்த அறிகுறி தென்பட்டாலும் மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 16, 2022, 03:59 PM IST
  • தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று
  • அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தல்
எந்த அறிகுறி இருந்தாலும் மருத்துவமனைக்கு செல்லுங்கள் - சுகாதாரத் துறை அமைச்சர் அறிவுறுத்தல் title=

கொரோனாவின் பிடியிலிருந்து உலக நாடுகள் சற்று வெளிவந்திருக்கின்றன. சமீப காலமாக ஓய்ந்திருந்த கொரோனா தொற்று தற்போது அதிகரித்துவருகிறது.

தமிழ்நாட்டிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 476 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

உயிரிழப்புகள் ஏதும் கடந்த மூன்று மாதங்களாக பதிவாகாமல் இருந்த சூழலில், நேற்று தஞ்சையை சேர்ந்த 18 வயது சிறுமி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுமி இரண்டு டோஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் கொரோனா மீண்டும் பரவாமல் தடுப்பதற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.

மேலும் படிக்க | ஒற்றை தலைமை... அஸ்திரத்தை கையிலெடுத்த ஓபிஎஸ் - அதிமுகவுக்குள் அடுத்த பூகம்பம்?

அதிகரித்துவரும் கொரோனா பரவல் தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “தடுப்பூசி செலுத்தாதவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டவர்கள் பூஸ்டர் டோஸையும் செலுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | TN 10th result 2022: நாளை வெளியாகும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - நேரம்?

கொரோனா தொற்றில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்வதற்கான ஆயுதம் தடுப்பூசி மட்டும்தான். முக்கியமாக காய்ச்சல், சளி உள்ளிட்ட எந்த அறிகுறி இருந்தாலும் மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து சரியான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News