கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது செப்பள்ளிவிளை கிராமம். நடுஇரவில் நடந்தேறிய பயங்கர சம்பவத்தால் ஊரே மயானமானது. ஊருக்குள் ஆம்புலன்ஸும் போலீஸ் வாகனம் நின்றிருக்க எதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை அது உறுதிப்படுத்தியது. என்ன நடந்தது என்று ஊருக்குள் விசாரித்தோம். ஊரின் மையத்தில் இருக்கும் சரோஜினி என்பவரின் வீட்டை கைகாட்டினார்கள். அவரது வீட்டை சுற்றி போலீசார் பாதுகாப்பு வலைவிரித்திருந்தனர். திறந்து கிடந்த வீட்டிற்குள் நுழைந்த போலீசார், படுக்கையில் பேச்சு மூச்சில்லாமல் கிடந்த சரோஜினியின் உடலிலிருந்து கைரேகை பதிவுகளை சேகரித்துக் கொண்டிருந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ஆம், கொலை... 75 வயதான சரோஜினி உருட்டுக்கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். அவரை கொலை செய்தது வேறு யாருமில்லை சரோஜினி மகனான விஜயன். குடிபோதைக்கு அடிமையான விஜயன் கேரளாவில் தங்கி பால் வெட்டும் தொழில் பார்த்து வந்தார். விஜயனின் தந்தை தேவராஜ் மனநலம் பாதிக்கப்பட்டவர், கொல்லப்பட்ட தாய் சரோஜினி மாற்றுத்திறனாளி. இதனால் தாய் தந்தையை அரவணைக்காமல் கேரளாவிலேயே தங்கியுள்ளார். இதற்கிடையே, சொந்த ஊருக்கு திரும்பும் போதெல்லாம் தலை நிற்காமல் குடித்துவிட்டு வருபவர் தாய்-தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.



விஜயனின் அராஜகத்தை ஊர்க்காரர்களும் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். யாராவது தட்டி கேட்டிருந்தால் இன்று சரோஜினி உயிரோடு இருந்திருப்பார். சம்பவத்தன்று தலைக்கேறிய போதையில் வீட்டிற்கு வந்த விஜயன் தாய் சரோஜினியிடம் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். வாக்குவாதம் முற்றிவிடவே, போதை வெறியில் இருந்தவர், வீட்டிலிருந்த கட்டையை எடுத்து சரோஜினியின் தலையில் பலமாக அடித்திருக்கிறார். இதில் தலை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரோஜினி பரிதாபமாக உயிரிழந்தார்.


மேலும் படிக்க | இளம்பெண்கள் கடத்தல் - தமிழக போலீசுக்கு தண்ணி காட்டிய முன்னாள் ஆசிரியர் கைது..!



மேலும் படிக்க | விருதுநகர் : இளம்பெண் பாலியல் வன்கொடுமை திமுக பிரமுகர் உள்ளிட்ட 8 பேர் கைது..!


இந்நிலையில் சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தடயவியல் வல்லுநர்களும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களைச் சேகரிக்கப்பட்டது. பின்னர் இறந்தவரின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரியின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தாயை மரக்கட்டையால் அடித்து கொன்ற விஜயனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுபோதையில் பெற்ற தாயையே மகன் கொலை செய்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


மேலும் படிக்க | சொத்துக்காக மகன் குடும்பத்தை எரித்துக்கொன்ற தந்தை


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR