இளம்பெண்கள் கடத்தல் - தமிழக போலீசுக்கு தண்ணி காட்டிய முன்னாள் ஆசிரியர் கைது..!

இரண்டு இளம்பெண்கள் கடத்தப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் ஆசிரியரை 8 மாத தேடலுக்கு பின்னர் கோவை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 2 இளம்பெண்களையும் மீட்டுள்ளனர்.

Written by - Gowtham Natarajan | Last Updated : Mar 22, 2022, 01:21 PM IST
  • இரண்டு இளம்பெண்களை கடத்தி சென்ற முன்னாள் ஆசிரியர்
  • 8 மாதங்களுக்கு பிறகு திருப்பதியில் வைத்து கைது செய்த போலீசார்
  • சித்திரவதைக்கு ஆளான இளம்பெண்கள் பத்திரமாக மீட்பு
இளம்பெண்கள் கடத்தல் - தமிழக போலீசுக்கு தண்ணி காட்டிய முன்னாள் ஆசிரியர் கைது..! title=

சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் மணிமாறன். சின்னதம்பி என்று செல்லமாக அழைக்கப்படும் இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர், மனைவியுடனான கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். மோசடியில் கில்லாடி புத்தி படைத்தவர் அக்கம்பக்கத்தினரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதன் உச்சக்கட்டமாக 2019ல் சேலம் ஆத்தூரில்  A to Z பெயரில் நிதிநிறுவனம் தொடங்கியவர் பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை மொத்தமாக சுருட்டிக்கொண்டு தலைமறைவாகியிருக்கிறார். பணத்தைப் பறிகொடுத்தவர்கள் சின்னதம்பி மீது போலீசில் புகாரளித்தனர். புகாரின் பேரில் ஒழுங்கீன நடவடிக்கையாக அரசுப்பள்ளியில் ஆசிரியர் பணியிலிருந்து அதிரடியாக மணிமாறன் நீக்கம் செய்யப்பட்டார்.

Manimaran

இதையடுத்து கோவை சரவணம்பட்டி பகுதியில் வசித்துவந்தவர், தான் ஒரு நடன ஆசிரியராக இருப்பதாக அப்பகுதி மக்களை நம்பவைத்துள்ளார். பண மோசடியில் ஈடுபட்டவர் ஆசிரியர் பணியிலிருந்து நீக்கம் செய்த பின்னரும் தன்னுடைய குற்ற புத்தியைக் குறைத்து கொள்ளவில்லை. அதே சரவணம்பட்டியில் வசித்து வந்த 16 வயது இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக பழகியிருக்கிறார். இதற்கிடையே கடந்த 2020, ஜீலை மாதம் இளம்பெண்ணை கடத்தி சென்று கன்னியாகுமரியில் உள்ள சுசீந்திரத்தில் தங்கியிருந்தார். அப்போது கன்னியாகுமரியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணையும் தன்னுடைய வலையில் விழ வைத்திருக்கிறார்.

மேலும் படிக்க | காதலியை பார்க்க சென்ற இளைஞர் பரிதாப சாவு..!

ஒருகட்டத்தில் இரண்டு இளம்பெண்களையும் அழைத்துக்கொண்டு தலைமறைவானார். இளம்பெண்களுடன் ஆசிரியர் மணிமாறன் தலைமறைவான நிலையில், கோவை மற்றும் கன்னியாகுமரியில் காவல்துறையினர் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். மூவர் குறித்தும் தகவல் எதுவும் கிடைக்காததால் அதிரடியாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வந்தனர். இதனிடையே கன்னியாகுமரி இளம் பெண் தனது வீட்டினரைத் தொடர்பு கொண்டு, தாங்கள் திருப்பதியில் இருப்பதாகவும், தங்களை டீ விற்க வைத்து ஆசிரியர் மணிமாறன் கொடுமைப்படுத்துவதாகவும் அதிர்ச்சி தகவல் கொடுத்திருக்கிறார்.

Kidnap

மேலும் படிக்க | சென்னை : பள்ளிக்கரணையில் வாலிபர் கழுத்தறுத்து கொலை ..!

இதன் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் திருப்பதிக்கு விரைந்து அங்குத் தலைமறைவாக சுற்றித் திரிந்த மணிமாறனை கைது செய்தனர். அவருடன் இருந்து சிறுமி உட்பட இருவரையும் பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஆசிரியர் மணிமாறனை கோவை அழைத்து வந்த தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Teacher

இளம்பெண்களை ஆசை வார்த்தை கூறி கடத்திய நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மணிமாறனை தேடி வந்த நிலையில் 8 மாதங்களுக்கு பின்பு அவர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் எதிர்கால வாழ்விற்கு நல்வழியமைத்து கொடுக்கும் பள்ளி ஆசிரியரே இதுபோன்று குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | விருதுநகரில் ஒரு 'பொள்ளாச்சி' சம்பவம்; வீடியோ... மிரட்டல்... வன்புணர்வு....!!!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News