ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீடுக்கான அனுமதியை முறைகேடாக பெற்றுத்தர உதவியதாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த பிப்., 28-ம் தேதி காலை சென்னை விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் டெல்லி அழைத்து செல்லப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார். கிட்டத்தட்ட 15 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தியது சிபிஐ. நேற்று டெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வரும் 24-ம் தேதி வரை டெல்லி திகார் சிறையில் கார்த்தி சிதம்பரத்தை அடைக்க உத்தரவிட்டது. 


மேலும் கார்த்தி சிதம்பரத்திம் ஜாமின் மனுவின் மீதான விசாரணை 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. ஆனால், இன்று மீண்டும் ஜாமீன் மனு மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம். .


இந்நிலையில், இன்று ஜாமீன் கிடக்கும் என எதிர்பார்க்கபட்ட நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் ஏ.எஸ்.சி.பி.எல். (ASCPL) நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.1.16 கோடி மதிப்பிலான சொத்துகள் அமலாக்கத்துறை முடக்கியது.