Nivar cyclone: தமிழ்நாட்டின் மரக்காணம் அருகே கரையைக் கடக்குமா?
வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் கரையை கடந்து வருகிறது. நள்ளிரவில் புயலின் மையப் புள்ளி கரையை கடக்கும். இதனால், காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையில் கடுமையான சூறவாளியாக மாறி 120 முதல் 130 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரிக்கு வடக்கில் அதி தீவிரமாக நிவர் கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்திருந்தது. புதுச்சேரிக்கு அருகே உள்ள மரக்காணத்தில் நிவர் (Nivar cyclone) சூறாவளி கரையை க் அடக்கும் என்ற எதிர்பார்ப்புகளால் புதுவை யூனியன் பிரதேசத்தில் மின் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்படுவதால், அருகில் இருக்கும் தாழ்வான பகுதிகளுக்கு அரசு அதிகாரிகள் கூடுதல் கவனத்தை செலுத்துகின்றனர்.
நிவர் புயலை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருப்பதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். கூடுதல் ஆணையர்கள் மூன்றுபேர், இணை ஆணையர்கள் நால்வர் மற்றும் துணை ஆணையர்கள் 12 பேர் மேற்பார்வையில் புயலை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொதுமக்களின் அவசர உதவிக்காக சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தொலைபேசி உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வாட்ஸ் அப் வசதி கொண்ட கைப்பேசி எண் ஒன்றும் அடங்கும்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையானசெய்திகளையும்
தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR