கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவிகளை வழங்கிய ஸ்டாலின்

சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, மக்களுக்கு நிவாரண உதவிகளையும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 25, 2020, 04:17 PM IST
  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று நிவாரண உதவி செய்த மு.க. ஸ்டாலின்.
  • மக்களைக் காப்போம். திமுக கழக தோழர்கள் களமிறங்கி அவர்களுக்கு உதவுங்கள்: MKS
  • மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைககளில் அரசு தீவிரக் கவனம் செலுத்த வேண்டும்.
  • தமிழக அரசும், மக்கள் நல்வாழ்வுத்துறையும் உரிய மருத்துவ முறைகளைக் கையாண்டு, மக்களைக் காத்திட வேண்டும்: MKS
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவிகளை வழங்கிய ஸ்டாலின் title=

Chennai: சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, மக்களுக்கு நிவாரண உதவிகளையும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். அதேபோல மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், அந்தந்த பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் நிவாரண உதவிகள் செய்து வருகின்றனர். மேலும் மக்களுக்குத் தேவையான உதவிகளையும், பேரிடர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்குத் தேவையான ஒத்துழைப்புகளையும் திமுக (DMK) நிர்வாகிகள் வழங்கிட வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இந்த பேரிடரில் இருந்து மக்களைக் காப்போம். திமுக கழக தோழர்கள் களமிறங்கி அவர்களுக்கு உதவுங்கள்" எனக்கூறி ஒரு அவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (DMK Chief MK Stalin) அழைப்பு விடுத்துள்ளார். அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது...,

ALSO READ |  சென்னைக்கு வெள்ள அபாயமா? செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறப்பு!

'நிவர்' புயலின் (Cyclone Nivar) தாக்கத்தால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மக்களின் வாழ்விடங்கள் நீரால் சூழ்ந்துள்ளன. சென்னை மாநகரைப் பொறுத்தவரை தாழ்வான மற்றும் கடற்கரைப் பகுதிகளில் உள்ளவர்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது. கடலோர மாவட்ட மக்களின் நிலையும் இதுதான்.

 

சென்னையில், திரு.வி.க. நகர், கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதிகள் உட்பட, பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தேன். மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை வழங்கினேன். 

செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு காரணமாக, அதனைத் திறந்துவிடப் பொதுப்பணித்துறை முடிவெடுத்து திறந்து விட்டிருப்பதால், அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களை 2015-ஆம் ஆண்டு வெள்ளப் பேரிடர் போன்ற சூழல் மிரட்டி வருகிறது. மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைககளில் அரசு தீவிரக் கவனம் செலுத்த வேண்டும்.

ALSO READ |  Live Updates: செம்பரம்பாக்கம் திறப்பு! நேரில்சென்று ஆய்வு மேற்கொண்ட தமிழக முதல்வர்

எப்போதும் மக்கள் பணியாற்றும் பேரியக்கமான தி.மு.கழகத்தின் கழக நிர்வாகிகளையும் - மக்களுக்குத் தேவையான உதவிகளையும் - பேரிடர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்குத் தேவையான ஒத்துழைப்புகளையும் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

இப்போது முதலில் நமக்குத் தேவை மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து - அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது என்பதை மனதில் கொண்டு தீவிரப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

ALSO READ |  நிவர் புயல் அச்சம்: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவித்த முதல்வர்

ஏறத்தாழ 9 மாதங்களாக கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தப் புயல் - மழைச் சூழல் அந்த நோய்த் தொற்றின் இரண்டாம் அலைக்குக் காரணமாகிவிடக்கூடாது. தமிழக அரசும், மக்கள் நல்வாழ்வுத்துறையும் உரிய மருத்துவ முறைகளைக் கையாண்டு, மக்களைக் காத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News