கோவை ஈஷா மையத்தை பார்வையிட்ட கட்டடக்கலை மாணவர்கள்!
நாகை கீழ்வேளூர் பிரைம் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இன்று (பிப் 25) கோவை ஈஷா யோகா மைய வளாகத்தை பார்வையிட்டனர்.
கோயம்புத்தூரில் உள்ள வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு, நாகப்பட்டினம் மாவட்டத்தின் கீழ்வேளூர் பிரைம் கல்லூரியில் இருந்து 28 கட்டடக்கலை மாணவர்கள் மற்றும் 2 கல்லூரி விரிவுரையாளர்கள் இன்று காலை வந்திருந்தனர்.
அவர்கள் ஈஷா மைய வளாகத்தில் உள்ள சூர்ய குண்டம், நந்தி, லிங்கபைரவி, சந்திரகுண்டம், தியானலிங்க மற்றும் ஆதியோகி திருவுருச்சிலை ஆகிய இடங்களை பார்வையிட்டனர். அவர்களுக்கு அவ்விடங்களின் ஆன்மீக முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் படிக்க | பக்தி பாதையில் விரதம் நிகழ்த்தும் விந்தை!
ஆன்மீக நோக்கத்தில் அறிவியல் ரீதியாக நுணுக்கமான கட்டடக்கலை அம்சங்களுடன் ஈஷா யோகா மையம் கட்டப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்வேறு தரப்பட்ட மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஈஷா யோகா மையத்திற்கு வருகை தருகின்றனர். ஈஷாவின் கட்டடக்கலை அம்சங்கள் மற்றும் அதன் நுணுக்கங்களை வருகை தரும் பலரும் வியந்து ரசித்து பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், மகாசிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க | நன்மைகள் அருளும் நவகிரக கோவில்கள்! தமிழகமெங்கும் வலம் வரும் ஆதியோகி ரதங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ