பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரரான அண்ணாவின் (Former Chief Minister of Tamil Nadu, Aringar Anna),பிறந்தநாளை முன்னிட்டு, நீண்ட காலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனைக் காலத்தை, நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து முன் விடுதலை செய்வதாக, தமிழகத்தில் ஆளும் திமுக அரசு வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்புக்கு சட்ட வடிவம் கொடுத்து, நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி இது தொடர்பாக முறையான அரசாணை (Government order by Tamil Nadu) வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழக சட்டசபையில் அறிவித்திருந்தார். அதன்படி, நவீன தமிழ்நாட்டின் முன்னோடியான பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் தொடர்பான மாநில அரசின் ஆணை, அரசாணையாக வெளியிடப்பட்டது. 


ALSO READ | அறிஞர் அண்ணா பிறந்தநாள்: 700 ஆயுள்தண்டனை கைதிகள் விடுதலை அரசாணை வெளியீடு-தமிழக அரசு


இது தொடர்பாக இந்திய தேசிய லீக் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி அதில்.,


இந்த அரசாணையில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள சுமார் 39 முஸ்லிம் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்ய கூடாது (மத மோதல் வழக்கு) என சூசகமாக கூறப்பட்டுள்ளது எமக்கு அதிர்ச்சி அளிக்கிறது.. தமிழக அரசு முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சமாக நடந்து கொண்டு இந்த அரசாணை தயாரித்து உள்ளதாக இந்திய தேசிய லீக் கட்சி கருதுகிறது.


முஸ்லிம் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலையில் பாஜக எதிர்க்கிறது என்பதற்காக பாஜகவுக்கு ஆதரவாக திமுக அரசு முஸ்லிம்களை வஞ்சிப்பது சரியாகாது. பாஜக கூட்டணியை எதிர்த்து தான் ஓர் அணியில் நின்று முஸ்லிம் சமூகம் திமுக கூட்டணியை ஆதரித்தது என்பதை திமுக தலைவர் புரிந்து கொள்ள வேண்டுமே ஒழிய திமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என பிரச்சாரம் செய்த பாஜக வின் மிரட்டலுக்கு துணை போகக்கூடாது. ஆகையால் தமிழக அரசு உடனே 700 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை அரசாணையில் திருத்தம் செய்து 39 முஸ்லிம் ஆயுள் தண்டனை கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம்.
 
தமிழக அரசு முஸ்லிம் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யவில்லை என்றால் திமுக கூட்டணியில் இருந்து இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் தமுமுக (மமக) உட்பட சமூக அரசியல் கட்சிகள் வெளியேற வேண்டும் அதே நேரத்தில் தங்களது MLA , MP பதவிகளையும் , வஃக்பு போர்ட் உட்பட வாரிய பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம்.


முஸ்லிம் அரசியல் கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வில்லை என்றால் எம்எல்ஏ எம்பி மற்றும் தலைவர்களின் வீடுகளை இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று கூறப்பட்டு உள்ளது.


ALSO READ | அண்ணா! எங்கள் அண்ணா!!  யார் அண்ணா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR