காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் கிராம கூட்டு சாலையில் காஞ்சிபுரம் வடக்கு ஓன்றிய விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக ஆளுயர அம்பேத்கர் சிலை திறப்பு விழா ஒன்றிய செயலாளர் தி.இளமாறன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் , விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலையினை திறந்து வைத்து மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இச்சிலை நிறுவ பாடுபட்ட 22 நபர்களுக்கு அம்பேத்கர் சிலை வழங்கி வாழ்த்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன் , கடந்த 15 ஆண்டுகளாக இச்சிலை அமைக்க பாடுபட்ட நிலையில் இதனை திறப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் , இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே அம்பேத்கர் சிலை அமைப்பது‌பெரூம் சவாலாக உள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டுமே அம்பேத்கர் சிலையினை அவமரியாதை செய்கின்றனர். இது பெரும் வருத்தத்தை அளிக்கிறது.


மேலும் படிக்க | தேவர் குரு பூஜையில் முதலமைச்சர் ஆப்செண்ட்... காரணம் இதுதான்


தமிழகத்தில் புதிய சிலை அமைக்க இன்றுவரை பெரும் சிரமத்தை காணும் நிலை உள்ளது . பிற மாநிலங்களில் அம்பேத்கர் சிலை வைப்பதிலும் , சட்டமன்ற , நாடாளுமன்ற வளாகத்தில் என பிரமிக்கும் வகையில் சிலை அமைக்கப்பட்டு சிறப்பு பெற்றுள்ளது. அம்பேத்கர் என்பவர் மடத்தின் மடாதிபதி அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபட்டவர் என்பது மட்டுமே .


அம்பேத்கர் , பெரியாரை ஏற்றுக் கொண்டவர்கள் பாஜகவை ஆதரிக்க மாட்டார்கள். தற்போது தமிழகத்தில் உள்ள பட்டியல் இன மக்கள் மற்றும் பழங்குடி மக்களை குறி வைத்து செயல்படும் நிலை கண்டு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.


நவம்பர் 6ம் தேதி அமைதி அறப்போர் என்கிற வகையில் மனு ஸ்ருதி குறித்து பொதுமக்ள்‌ அறிந்து கொள்ளும் வகையில் குறிப்பேடு வழங்க உள்ளது. இந்நிகழ்ச்சியில் விசிக மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் பார்வேந்தன் , காஞ்சி மண்டல செயலாளர் விடுதலைசெழியன் , மாவட்ட ஓருங்கிணைப்பாளர் பாசறை செல்வராஜ் , மக்கள் மன்றம் நிர்வாகிகள் மகேஷ், ஜெர்சி , விசிகவை சேர்ந்த இந்திரா அம்பேத்கர்வளவன்‌, ஒன்றிய குழு உறுப்பினர் ரேகா ஸ்டாலின் , பருத்தி குளம் சேகர் , ஏரிக்கரை டேவிட் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் கீழ்கதிர்பூர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மேலும் படிக்க |’பொய் செய்திகளை பரப்பாதீர்’ அண்ணாமலைக்கு தமிழக காவல்துறை வேண்டுகோள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ