மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் காக்க அனைவரும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தமிழக அரசின் செயல்பாடு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தடுப்பு நடவடிக்கைகள், புள்ளி விவரங்கள் குறித்து தமிழக மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது. வெளியில் செல்லும் அவசியம் ஏற்பட்டால் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் மக்கள் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 


இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்.... மக்களின் முழு ஒத்துழைப்பு கொரோனா பரவலைத் தடுப்பது சாத்தியமாகாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 


READ | மாஸ்க் இல்லை என்றால் வாடிக்கையாளரை கடைக்குள் அனுமதிக்க கூடாது: TN Govt


அதில், மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கை சாத்தியமாகாது என்று கூறியுள்ளார். வெளியில் செல்லும் அவசியம் ஏற்பட்டால் கண்டிப்பக முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று வலியறுத்தியுள்ளார். மேலும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் தமிழகத்தில் தான் அதிகம் என்றும் உலகிலேயே இறப்பு விகிதம் தமிழகத்தில் தான் மிகவும்குறைவு எனக் குறிப்பிட்டுள்ளார்.