மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் என ஜெ.தீபா ஆதரவு தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் வரும் 18.04.2019 அன்று நடைபெறவிருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தலையும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலையும் சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. இந்நிலையில், மக்களவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு கிடைக்காததால் தனித்துப் போட்டியிடுவதாக சமீபத்தில் கூறிய எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளரும் ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான ஜெ. தீபா தற்போது ADMK-க்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.


இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய J.தீபா கூறுகையில்; நாடாளுமன்றத் தேர்தலிலும், 18 தொகுதிகளுக்கான சட்டமன்றத் இடைத்தேர்தலிலும் நாங்கள் ADMK-க்கு ஆதரவு கொடுக்கிறோம். மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் ADMK வெற்றி பெற எனது தொண்டர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து பாடுபடுவர். நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் தான் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ADMK-ன் எதிர்கால நலன், வெற்றியை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்கப்படுகிறது என கூறியுள்ளார்.
 
ADMK-வுடன் என்னுடைய இயக்கத்தை இணைப்பேன் என கூறியுள்ள ஜெ.தீபா, அதிமுகவோடு இணையும் பேச்சுவார்த்தை தேர்தலுக்கு பிறகு தொடரும். ADMK தலைமையிலிருந்து அழைப்பு வந்தால் பிரசாரம் மேற்கொள்வேன். ADMK-ல் எந்தஒரு பொறுப்பையும் நான் எதிர்பார்க்கவில்லை. ADMK-ன் எதிர்கால நலன் மட்டுமே முக்கியமானது. கட்சி அழிவுப்பாதைக்கு சென்றுவிடக்கூடாது. அதற்காக பணியாற்றுவேன் என தெரிவிவ்த்துள்ளார்.