J.Jayalalithaa: இரும்புப் பெண்மணி அம்மாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினம்
தமிழகத்தை ஆறு முறை ஆட்சி செய்த செல்வி ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இரும்பு பெண்மணி என்று பெயர் பெற்ற செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இயற்கை எய்தினார்.
புதுடெல்லி: தமிழகத்தை ஐந்து முறை ஆட்சி செய்த செல்வி ஜெயலலிதாவின் 4-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இரும்பு பெண்மணி என்று பெயர் பெற்ற செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இயற்கை எய்தினார்.
2016-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் அன்றைய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா.
மருத்துவமனையில் 74 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா (J.Jayalalitha) அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், சிகிச்சையில் உடல் நலம் தேறி வந்த ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி தனது 68 வயதில் உயிரிழந்தார்.
கழக நிரந்தரப் பொதுச்செயலாளர் மாண்புமிகு அம்மா அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரை நினைவு கூர்வோம் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அஞ்சலி செலுத்துகிறது.
ஜெயலலிதா செப்சிஸ் (Sepsis) என்ற தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த பாதிப்பால் அவரது இருதயம் பாதிக்கபட்டு, சிறுநீர் தொற்று பாதிப்பும் ஏற்பட்டு இருந்தது. தொடர்ந்து பல்வேறு காரணங்களால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
Also Read | அபராதம் செலுத்தினார் சசிகலா...விரைவில் விடுதலையா?
முன்னாள் முதலமைச்சருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) உள்ளிட்ட பல தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இணையவாசிகள் அம்மா என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு வருகின்றனர். தற்போது, #அம்மா என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்தியளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது. தமிழகத்தில் அம்மா என்ற ஹேஷ்டேக் முதலிடத்தில் உள்ளது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR
zeenews.india.com/tamil/topics/