தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவர்களுக்காக பல்வேறு உதவித் தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் முதல் தலைமுறை பட்டதாரி திட்டமும் தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ளது. ஒரு குடும்பத்தில் யாரும் படிக்காமல் இருந்து, முதன்முறையாக பொறியியல் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் உதவித் தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்படி, ஒற்றைச் சாளர முறையில் தொழில்முறைப் படிப்புகளில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் மாநில அரசே ஏற்கும். மாணவர்களின் சாதி மற்றும் வருமானம் எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2023-24 ஆம் கல்வியாண்டில் 1,57,342 பொறியியல் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு ரூ.379.31 கோடி உதவித் தொகை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. 2021-22ஆம் கல்வியாண்டில் 1,46,559 மாணவர்களுக்கு ரூ.353.34 கோடியும், 2022-23ஆம் ஆண்டுக்கான முதல் தலைமுறை பட்டதாரி கல்விக் கட்டணச் சலுகையாக 1,45,695 மாணவர்களுக்கு ரூ.356.11 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையானது மாணவர்கள் தங்கள் கல்வியை தொடருவதற்கும், கல்லூரிகளில் இருந்து இடையில் நிற்பதை தவிர்த்து, அவர்களின் படிப்பை முழுமையாக நிறைவு செய்யவும் உதவுகிறது என உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 


மேலும் படிக்க | அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய எச்சரிக்கை


இந்த ஆண்டு பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், 2024-2025 ஆம் ஆண்டில் 1.65 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக முதல் தலைமுறை பட்டதாரிகள் உதவித் தொகை 400 ரூபாய்க்கு மேல் ஒதுக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முறை மின்னணு படிவம் மற்றும் இ-சான்றிதழ் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 


விண்ணப்பதாரரின் சகோதரர் அல்லது சகோதரி ஏற்கனவே தொழில்முறை படிப்புகள் படிப்பதற்கான முதல் தலைமுறை பட்டதாரி கல்வி கட்டண சலுகையைப் பெற்றுள்ளனர் என்றால், விண்ணப்பதாரருக்கு இந்த உதவித்தொகை கிடைக்காது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த உதவித் தொகை கிடைக்கும். முதல்தலைமுறை பட்டதாரி உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு விண்ணப்பதாரரும் உயர்கல்விச் செலவுகளுக்காக 25 ஆயிரம் ரூபாய் பெறுவார்கள். உதவித்தொகைக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதில் வெளிப்படைத்தன்மையை நோக்கமாகக் கொண்டு, பதிவு செய்வதிலிருந்து உதவித்தொகை வழங்குவது வரை முற்றிலும் ஆன்லைன் செயல்முறையாக இருக்கும் எனவும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


முதல் தலைமுறை பட்டதாரி உதவித் தொகை விவரம் : 


* இந்த உதவித் தொகைக்கு மின்னணு படிவங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
* குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த உதவித் தொகை கிடைக்கும். 
* பொறியியல், தொழில்முறை படிப்புகளை தேர்வு செய்யும் மாணவ, மாணவிகள் விண்ணபிக்கலாம்.
* விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை உதவித் தொகை கிடைக்கும்.



உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ