தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றதாகும். அதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் தினமான இன்று நடக்கிறது பாலமேட்டில் நாளையும், அலங்காநல்லூரில் 17-ந் தேதி நடக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கியுள்ளது. 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டில் களமிறங்கியுள்ளனர். பொங்கல் (Pongal Festival) கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக நடைபெறும் ஜல்லிகட்டு போட்டிகளை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். மதுரை மாவட்ட கலெக்டர் உள்பட முக்கிய நபர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். 



ALSO READ | Pongal 2022: திகட்டாமல் தித்திக்கும் தைப்பொங்கல் கற்றுத்தரும் வாழ்க்கைப் பாடங்கள்


முதலில் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. அதன் பின்னர் காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. அவற்றை மாடுபிடி வீரர்கள் அடக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவனியாபுரம் பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய போட்டி நடைபெறும் இடத்தில் மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். 



அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காண குறைவான பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.


ALSO READ | Pongal 2022 ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுளின் செல்வம் தங்கும், வளமும் மகிழ்ச்சியும் பொங்கும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR