கோவையில் இன்று ஜல்லிக்கட்டு- 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை இணைந்து நடத்தும் மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று காலை 7 மணிக்கு துவங்க உள்ளது.
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை ஏழு மணிக்குத் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி கோவை (Coimbatore) செட்டிபாளையத்தில் கோவை மாவட்டம் நிர்வாகம் மற்றும் கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை இணைந்து நடத்தும் மாபெரும் ஜல்லிக்கட்டு (Jallikattu) திருவிழா இன்று காலை 7 மணிக்கு துவங்க உள்ளது. ஜல்லிக்கட்டு விழாவை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைக்க உள்ளார். இந்த போட்டியில் 700 காளைகள், 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அதேபோல் மாடுகளுடன் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.
ALSO READ | பொறி பறக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு..! திமிரும் காளைகள்.. சீறும் காளையர்கள்
மாடுகளுடன் வருபவர்களும், மாடு பிடி வீரர்களும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ், 24 மணி நேரத்திற்குள் கொரோனாபரிசோதனை சான்றிதழ் கொண்டு வர வேண்டும், அங்கு வரக்கூடிய அலுவலர்கள், பத்திரிக்கையாளர்களும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்திரவிட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை முதலே வெளியூர்களில் இருந்து காளைகள் வர துவங்கியுள்ளது. தனியார் மருத்துவமனை கேஎம்சிஎச் சார்பில் மருத்துவ வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலமாவதால், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் இந்த போட்டியை தொலைகாட்சிகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெறும் பகுதியில், பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ALSO READ | எங்களுக்கும் உண்டு பொங்கல்: மகிழும் யானையும் குதிரையும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR