Thalapathy 67 Update: கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற திரைப்பட நிகழ்வில், தளபதி 67 அப்டேட் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேரை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஜமீஷா முபீனின் இல்லத்திற்கு நள்ளிரவில் அழைத்து வந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதிவேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வித்யா சென்ற மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தமிழகத்தில் பாஜக எங்கே இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜகவுக்கு முதலில் எவ்வளவு ஓட்டு வங்கி இருக்கிறது என விளாசியுள்ளார்.
மாணவர்கள் அறிவு மற்றும் வயிற்று பசிக்கு உணவு அளிக்கும் ஆற்றல் அறக்கட்டளையின் நிறுவனரும், முன்னணி தொழிலதிபருமான ஆற்றல் அசோக்குமார் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
சிஎஸ்ஐ திருமண்டல தலைமை அலுவலகத்தில் சுமார் 6 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தது. இதனால் அச்சமடைந்த ஊழியர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
Coimbatore Farmers Announce Farmers Protest: டெல்லியில் விவசாயிகள் போராடியதை போன்று அடுத்த வருடம் மத்திய மாநில அரசுகளை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக கோவை விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
மேற்கு மண்டலத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் குற்றங்கள் குறைந்துள்ளதாகவும், கோவை சரகத்தில் 1211 கிராமங்கள் கஞ்சா பழக்கம் உள்ள கிராமங்களாக கண்டறியப்பட்டுள்ளதாக ஐ.ஜி சுதாகர் பேட்டி.
கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கு: நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்ட 6 பேரில் மூன்று பேருக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவு.
சிறை கைதிகளின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 3 மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 5,000 சிறை கைதிகளுக்கு ஈஷா சார்பில் சிறப்பு யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன.
கோவையில் கடையின் உரிமையாளருக்கும் வாடகைக்கு இருந்து மெடிக்கல் ஷாப் நடத்தி வருபவருக்கும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில் மெடிக்கல் ஷாப் பொருட்களை அதிகாலையில் சூறையாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
எப்படியாவது உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும், அதன்பிறகு முதலமைச்சராக்க வேண்டும் என்பது தான் முதல்வர் ஸ்டாலினின் ஒரே கொள்கை என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.