இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்பட மாட்டேன் - அதிரடி காட்டும் ஜெயக்குமார்... அடுத்தது என்ன?
இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்பட மாட்டேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருப்பது அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி வானகரத்தில் நடக்கவிருக்கிறது. இந்தச் சமயத்தில் ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.
இரட்டை தலைமையே நீடிக்கலாம் என தற்போது ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் கூறினாலும், எடப்பாடி பழனிசாமியின் மௌனமும், அவரது ஆதரவாளர்களின் செயல்பாடுகளும் இந்தப் பிரச்னையை மேலும் வளர்த்துக்கொண்டே செல்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானத்தின் இறுதி வடிவமைப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்த ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒற்றைத் தலைமை குறித்து நான் பேசியதில் எந்தவிதமான் தவறு இருக்கிறது. நான் வெளிப்படைத்தன்மையோடு மாவட்ட செயலாளர்களின், தொண்டர்களின் எண்ணத்தைத்தான் பிரதிபலித்தேன்.
நான் சிதம்பர ரகசியத்தை உடைக்கவில்லை. இதுபோன்ற பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். ஒற்றைத் தலைமை தேவையா, இரட்டைத் தலைமை தேவையா என்பது குறிக்த்து கட்சிதான் முடிவு செய்யும்” என்றார்.
முன்னதாக, நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “கூட்டத்தில் நடந்ததை ஜெயக்குமார் வெளியில் சொன்ன பிறகுதான் இவ்வளவு பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியிருந்தார்.
மேலும் படிக்க | அதிகாரம் எதுவுமற்ற ‘பல்’ இல்லாதது காவிரி மேலாண்மை ஆணையம் - வைகோ சாடல்
ராஜ்யசபா எம்.பி.,பதவிக்கு ஜெயக்குமார் முயற்சித்ததாகவும் அதற்கு ஓபிஎஸ்தான் முட்டுக்கட்டை போட்டதாக தகவல் வெளியானது. எனவே அந்தக் கணக்கை எப்படியாவது தீர்க்க வேண்டுமென ஜெயக்குமார் கோதாவில் குதித்திருக்கிறார்.
அதுதான் இப்படி ஜெயக்குமார் vs ஓபிஎஸ் என்று வந்து நிற்கிறது. இன்னமும் என்னென்ன நடக்கவிருக்கிறதோ என்கின்றனர் கட்சியை சேர்ந்த சிலர்.
இதற்கிடையே, இன்று காலை தலைமை அலுவலகத்துக்கு வந்த மாரிமுத்து என்ற அதிமுக நிர்வாகியை, நீ எடப்பாடி ஆளா என்று கேட்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR