எடப்பாடி ஆளானு கேட்டு அடிச்சாங்க... தாக்கப்பட்ட இபிஎஸ் ஆதரவாளர் - ரத்தக்களறியான அதிமுக தலைமை அலுவலகம்

Tamil Nadu Political News: அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 18, 2022, 03:40 PM IST
  • இபிஎஸ் ஆதரவாளர் மீது அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்குதல்.
  • 23 ஆம் தேதி கூடுகிறது அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம்.
  • பன்னீர்செல்வமும் தன் பங்குக்கு அரசியல் ஆட்டம் ஆட ஆரம்பித்திருக்கிறார்
எடப்பாடி ஆளானு கேட்டு அடிச்சாங்க... தாக்கப்பட்ட இபிஎஸ் ஆதரவாளர் - ரத்தக்களறியான அதிமுக தலைமை அலுவலகம் title=

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்திருக்கிறது. தற்போதைக்கு ஒற்றைத் தலைமை தேவையில்லை என கூறி ஓபிஎஸ் முற்றுப்புள்ளி வைக்க முயன்றாலும் நீரு பூத்த நெருப்பாக கட்சிக்குள் இவ்விவகாரம் தலை தூக்கிக்கொண்டே இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி இதுதொடர்பாக மௌனம் காத்தாலும் அவரது ஆதரவாளர்கள், ‘ஒற்றைத் தலைமையே’, ‘கழக பொதுச்செயலாளரே’ என கட் அவுட்கள் வைத்து ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு மிரட்சியைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். 

OPS

இது ஒருபுறமிறக்க பன்னீர்செல்வமும் தன் பங்குக்கு அரசியல் ஆட்டம் ஆட ஆரம்பித்திருக்கிறார். நிலைமை இப்படி இருக்க 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கூடவிருக்கிறது. அந்தக் கூட்டத்திலேயே ஒற்றைத் தலைமை நாற்காலியில் அமரந்துவிடுவது என எடப்பாடி முடிவு செய்திருப்பதாகவும் ஒரு தகவல் பரவிவருகிறது.

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களின் இறுதி வடிவமைப்பு கூட்டம் இன்று நடந்தது. 

மேலும் படிக்க | தேடப்படும் குற்றவாளிகளில் பலர் பாஜகவின் நிர்வாகிகள் - கி.வீரமணி பரபரப்பு குற்றச்சாட்டு

இதற்கிடையே தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்திலும் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்தச் சூழலில் தனது ஆலோசனைக் கூட்டத்தை முடித்துவிட்டு தீர்மானக் குழு கூட்டத்திற்கு வந்த ஓபிஎஸ், கூட்டத்தில் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். 

மேலும் படிக்க | மோடியை கோர்த்துவிட்ட ஓபிஎஸ்... கடுப்பில் டெல்லி?

அப்போது, தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான பெரம்பூர் மாரிமுத்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ரத்தக் காயத்துடன் வெளியே வந்த அவர், நீ இபிஎஸ் ஆதரவாளரானு கேட்டு அடிச்சாங்க என்றார். 

Marimuthu

இன்னும் சில தினங்களில் பொதுக்குழு கூடவிருக்கும் சூழலில் தீர்க்கப்படாத ஒற்றைத் தலைமை பிரச்னை 23ஆம் தேதி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்பதற்கான அறிகுறிதான் இன்று அதிமுக பிரமுகர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

மேலும் படிக்க | அதிமுக இரு பிரிவினருக்கான சாதி கட்சியாகிவிட்டது - முன்னாள் எம்.எல்.ஏ வேதனை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News