Jayakumar Slams MK Stalin: முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து இன்று மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார்,"இந்திராகாந்தி, லால் பகதூர் சாஸ்திரியையும் பிரதமராக உருவாக்கிய தமிழர். 1940இல் சிறையில் இருந்ததால் பதவியை உதறியவர் காமராஜர், ஆனால் தற்போது சிறை கைதியாக இருந்துக்கொண்டு பதவியை காந்தம் போல பிடித்துக்கொண்டு இருக்கிறார் ஒருவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொடநாடு விவகாரத்தில் (ஸ்டாலின்) His master voice ஆகா ஓபிஎஸ் இருக்கிறார்.  கொடநாடு விவகாரத்தில் சிபிஐ அமைத்து விசாரிக்க வேண்டும் என்றுதான் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். வழக்கை சிபிஐயிடம் ஒப்படைப்பதில் என்ன பிரச்சனை. திமுகவின் தூண்டுதலின் பெயரில்தான் ஆகஸ்ட் 1ஆம் தேதி ஓபிஎஸ் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்.


செந்தில் பாலாஜியை அமைச்சர் என்ற பாதுகாப்பு கேடயத்தை பயன்படுத்தி விசாரணை மேற்கொள்வதை தடுக்கிறார்கள்.  இதற்குமேல் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் நீட்டிக்காமல் அவரை நீக்குவதுதான் சரி. முதலமைச்சரே ஆட்சியை கலைத்தாலும் பரவாயில்லை என்கிறார். ஆட்சி கலைந்துவிடும் என்ற பயத்தில் அவரே பேசியுள்ளார். அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து 20ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தக்காளி, இஞ்சியை கண்ணீல் பார்க்க முடியவில்லை. 


மேலும் படிக்க |  இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்... ரூ.1000 வாங்க டோக்கன் - இந்த தேதி முதல் விநியோகம்!


டாஸ்மாக் அரசாக, சாராய மாடல் அரசாக திமுக உள்ளது. எந்த மாநிலத்திலாவது டாஸ்மாக் நேரத்தை மாற்ற ஆலோசனை நடைபெற்றுள்ளதா?. தமிழ்நாட்டில் தான் முதல் முறையாக நடைபெற்றுள்ளது. விடியல் விடியல் என்று சொல்லிவிட்டு விடிந்த உடனேயே சாரயத்தை விற்க விடியா அரசு முயற்சிக்கிறது. எதிர்ப்பு மட்டும் தெரிவிக்கவில்லை என்றால் 7 மணிக்கே கடையை திறந்து இருப்பார்கள். அமைச்சர் முத்துச்சாமி டாஸ்மாக் நேர விரிவாக்கத்தில் எதிர்ப்பு கிளம்பியதும் அப்படி அறிவிக்க இல்லை என்று சொல்லியிருக்கிறார். 


செந்தில் பாலாஜியை டெல்லிக்கு தூக்கிவிடுவார்கள். அவரை டெல்லிக்கு கொண்டு சென்று ஒப்புதல் வாக்குமூலம் பெற்று விடுவார்கள். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தை சேதப்படுத்தினர். ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகிய மூன்று பேரும் ஒரே நிலையில் தான் இருக்கிறார்கள். இவர்களை தவிர யார் மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் சேர்த்துக்கொள்வோம்" என்றார். 


முன்னாள் முதலமைச்சர் காமராஜாரின் 121ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இன்றைய தினம் கல்வி தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை சென்னை நங்கநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கல்லி வளர்ச்சி நாள் விழாவில் கலந்துகொண்டு காமராஜரின் திருவுருப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காமராஜர் சிலைக்கு இன்று மரியாதை செலுத்துகின்றனர். 


குறிப்பாக, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இயக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். அதுமட்டுமின்றி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மாணவ - மாணவியருக்கு முடிந்த அளவு நோட்டு, புத்தகம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது நினைவுக்கூரத்தக்கது.


மேலும் படிக்க | பொங்கலுக்கு வேட்டி, சேலை: நிதி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ