Jayakumar About Senthil Balaji: சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கக்கோரி, அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், சென்னையில் நடந்த ஆர்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,"இந்த விடியாத அரசு பொறுப்பேற்று எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பதன் அடிப்படையில் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மீண்டும் நம்முடைய பொன்மனச் செம்மல் எடப்பாடி, அவர்கள் வரவேண்டும் என்ற அந்த ஒரு எண்ணம் மக்களிடையே மேலோங்கி உள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்த ஒன்றை கூட இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என பாராளுமன்ற தேர்தலுக்காக ஒரு பசப்பு வார்த்தையை காட்டி வருகின்றது.


பிடிஆர்-க்கு தண்டனை


நாட்டிலே முதலமைச்சர் உடைய தந்தையாருடைய புகழ்பாடுகின்ற வகையில் தான் இந்த ஆட்சியின் செயல்பாடுகள் இருந்து வருகிறது. முப்பதாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றதை பிடிஆர்  டெலிபோனில் பேசி இருப்பது உண்மை என்கின்ற வகையில், அதற்காக அவருக்கு தண்டனை அளிக்கும் விதமாக முக ஸ்டாலின் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை இலாக்கா மாற்றம் செய்திருக்கிறார். ஆயிரம் கோடி ரூபாய்  ஸ்டாலினின் மருமகன் சபரீஷனும் அவருடைய குடும்பத்தினரும் எங்கே பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. 


மேலும் படிக்க | செந்தில் பாலாஜியை பாஜகவிற்கு அழைக்கிறார் அண்ணாமலை: திமுக எம்.பி செந்தில்குமார் பளீர்


மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சியாக இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. காலையில் இருந்து இரவு தூங்கும் வரை எங்கு ஊழல் செய்யலாம் எப்படி செய்யலாம்  என அதிலே கைத்தறிந்தவர் ஆக இருக்கின்ற செந்தில் பாலாஜி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக தொடர்கிறார். இலாகா இல்லாததற்கு எதற்கு அமைச்சர். இதனால் மக்களுடைய வரிப்பணம் தான் வீணாகிறது. செந்தில் பாலாஜி வாயை திறந்தால் ஆரம்பம் முதல் கடைசி வரை ஊழல் செய்த அனைவரும் மாற்றக்கூடிய ஒரு நிலைமை நிச்சயமாக ஏற்படும். 


முக்கால்வாசி பேர் மாட்டுவார்கள்


முப்பதாயிரம் கோடி ரூபாய் ஊழல் மட்டும் இல்லாமல் டாஸ்மாக் விவகாரம் இதையெல்லாம் எப்படி திசை திருப்ப வேண்டும் என்ற வேலை நடந்து கொண்டிருக்கிறது. அன்றைக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்தால்  செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுப்போம் என சொல்லிவிட்டு இப்போது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பதை கட்சியினுடைய தூண்டுதலின் பெயரில் நடக்கிறது என்றால் எப்படி. மக்கள் முன்னணியில் இதையெல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக இன்று ஜனநாயக ரீதியான இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறோம்.


முதல்வர் முக ஸ்டாலின் ஒரு பண்பு இல்லாமல் ஒரு பதட்டத்தில் வீடியோ பதிவு வெளியிட்டு இருக்கிறார். பூச்சாண்டிக் எல்லாம் பயப்படுகிற இயக்கம் அண்ணா திமுக கிடையாது. இன்னைக்கு ஒரு பயத்தினுடைய உச்சத்தில் பயத்தினுடைய வெளிப்பாட்டால்  எல்லோரும் ஜெயிலுக்கு போகின்ற சூழ்நிலை வரும் என்ற பயத்தால் அந்த வீடியோவில் பேசியிருப்பது நன்றாகவே தெரிகிறது.


2026-ம் நமதே...


அதிமுகவினர் மீது திமுக எந்த வழக்கு வேண்டுமானாலும் போடட்டும் அதை நீதிமன்றத்தின் மூலம்  முறையாக எதிர்கொள்ள நாங்கள் தயார். செந்தில் பாலாஜி வாயை திறந்தால் திமுகவில் முக்கால்வாசி பெயர் மாட்டுவார்கள். அந்தப் பதட்டத்தில் தான் அந்த ஸ்டாலின் பேசி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.


மக்கள் பிரச்சனைக்காக அண்ணா திமுக எதிர்த்து போராடி வருகிறது. இன்று எத்தனையோ இளைஞர்கள் வேலை இல்லாமல் திண்டாடி வருகிறார்கள். இளைஞர்கள்  கொதித்து எழுந்தால் இந்த அரசாங்கம் தாங்காது.
இன்று பொதுமக்களுக்கு தான் பாதுகாப்பு இல்லை என்று பார்த்தால் காவல்துறையினருக்கும் பாதுகாப்பு இல்லை, மாவட்ட ஆட்சியருக்கு கூட பாதுகாப்பு இல்லை. இன்றைக்கு மத்திய அரசு எல்லா ரிப்போர்ட்டையும்  எடுத்துவிட்டார்கள். நாடு நமதே நாற்பதுவும் நமதே, 2024 மட்டும் இல்லை 2026-ம் நமதே" என்றார்.


மேலும் படிக்க | அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குவது எப்போது? ​அறிவிப்பு இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ