மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா. இவரின் கணவர் மாதவன். இவர்களுக்குத் திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் அதற்குப் பல வருடங்களாகவே சிகிச்சை பெற்று வந்துள்ளனர். பல முறை குழந்தை பிறப்பதில் சிக்கல் நீடித்து வந்திருக்கிறது. இந்நிலையில் தீபாவிற்கு வாடகைத் தாய் மூலமாகக் குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஓடும் ரயிலில் கழன்ற இரண்டு பெட்டிகள் - விசாரணைக்கு உத்தரவு


இது குறித்து தீபா கூறுகையில், “5 வருடச் சிகிச்சைக்குப் பிறகு தற்போது எனக்குக் குழந்தை பிறந்து இருக்கிறது. இதற்கு முன்பு பலமுறை கருத்தரித்த நிலையிலும் அப்போது குழந்தை பிறப்பதில் சிக்கல்கள் இருந்தன. இதனால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாமல் இருந்தது. பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு குழந்தை பிறந்துள்ளதால், கவனமாக வளர்க்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.



எனக்கும், கணவர் மாதவனுக்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் மிரட்டல்கள் வருகின்றன. இதனால் உறவினர்களுடன் கலந்து ஆலோசித்து விட்டு குழந்தை பிறந்தது தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் வாரிசுகளாக கருதப்படுகின்றனர். அவர்கள் இருவரும் ஜெயலலிதாவின் சொத்துகளுக்கும் வாரிசுகளாக உரிமை கோருவதால், இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | மதம் வைத்து அரசியல் செய்பவரை, பதம் பார்க்க வந்தவரே! போஸ்டரால் பரபரப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ