மதம் வைத்து அரசியல் செய்பவரை, பதம் பார்க்க வந்தவரே! போஸ்டரால் பரபரப்பு!

கோவையில் கமலின் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Nov 6, 2022, 02:42 PM IST
  • கமல்ஹாசன் நாளை தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
  • இதற்காக அவரது கட்சியினர் கோவையில் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.
  • போஸ்டரில் உள்ள வசனங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.
மதம் வைத்து அரசியல் செய்பவரை, பதம் பார்க்க வந்தவரே! போஸ்டரால் பரபரப்பு!

கோவை மாநகர பகுதியில் சமீப காலமாக போஸ்டர் கலாச்சாரம் என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாஜக மற்றும் திமுகவினர் மாறி மாறி போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இதே போல கோவை ரயில் நிலையம் பகுதியில் மத்திய மாவட்டம் மக்கள் நீதி மையத்தினர் நவம்பர் 7ல் பிறந்தநாள் காணும் கமலஹாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.  அந்த போஸ்டரில் மனிதனை மனிதனா பாரு, மதங்களும் தன்னால ஓடும் எனவும், மதம் வைத்து அரசியல் செய்பவரை, பதம் பார்க்க வந்தவரே நம்மவரே! நீ வாழ்க பல்லாண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஆளுநரை மாற்றுவதா?... நெவர்... எல். முருகன் உறுதி

இது இணையத்தில் மற்றும் கோவை பகுதிகளில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  பொதுவாக அஜித், விஜய் ரசிகர்கள் தான் இவ்வாறு போஸ்டர்கள் ஓட்டுவார்கள்.  வருங்கால முதல்வரே, மக்களை காக்க வந்த வள்ளலே போன்ற வசங்களுடன் இவர்கள் ஓட்டும் போஸ்டர்கள் சர்ச்சையை கிளப்பும்.  அந்த வரிசையில் தற்போது கமலின் ரசிகர்களும் இணைந்துள்ளனர்.  

mnm

கமல் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.  மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.  நாளை அவரது பிறந்தநாளை ஒட்டி விக்ரம் படத்தின் வெற்றி விழாவும் சென்னையில் நடைபெற உள்ளது.  கமல்ஹாசன் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பும் விரைவில் வெளிவர உள்ளதாகவும் கூறப்படுகிறது.  

மேலும் படிக்க | உண்டியல் குலுக்கியவர்கள் இப்போது விலை போய்விட்டார்கள் - கம்யூனிஸ்ட்டை சாடிய சி.வி.சண்முகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News