சென்னை: பொதுமக்கள் அஞ்சலி செலுத்த முன்னால் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதா அவர்கள் நேற்று இரவு 11.30 மணி அளவில் மரணம் அடைந்தார். இதையொட்டி அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஜெயலலிதா இறந்த செய்தியை கேட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் ஆஸ்பத்திரியில் கூட்டம் கூடாமாக குவிந்தனர். அங்கு கூடியிருந்த தொண்டர்கள் கதறி அழுதனர்.


பின்னர் ஜெயலலிதா உடல் போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. தற்போது பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளது. 


ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அதிகாலை முதலே பொதுமக்கள் அதிமுக தொண்டர்கள் ராஜாஜி அரங்கில் குவிந்துள்ளனர். இன்னும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ராஜாஜி அரங்கில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.


அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா கலைஞர்கள் , முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள் என அனைவரும்  ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.


ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று சென்னை வருகை.


மத்திய அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு, கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடவும், அரசு விழாக்களை ரத்து செய்ய உத்தரவு
 
ஜெயலலிதா மறைவுக்கு 7 நாட்கள் தமிழக அரசு துக்கம் அனுசரிப்பு மேலும் 3 நாட்கள் பள்ளி கல்லூரி விடுமுறை என்று தமிழக அரசு அறிவிப்பு.