அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து விசாரிக்க கடந்த 2017 செப்டம்பரில் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சசிகலா, ஓபிஎஸ், அப்போலோ மருத்துவர்கள், அதிகாரிகள் உட்பட 154க்கும் மேற்பட்டோரிடம்  ஆணையம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், ஜெயலலிதா மரணம் குறித்து எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அறிக்கை சில நாள்கள் முன்பு ஆறுமுகசாமி ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.


மேலும் படிக்க | ஏழைகள் இருக்கும் வரை கலைஞர் கொண்டுவந்த இலவசங்கள் இருக்கும்: அமைச்சர் மெய்யநாதன்


இந்தச் சூழலில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தமிழ்நாடு அரசு அளித்த அவகாசம் கடந்த 24ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 23ஆம் தேதி இரவு கோவை புறப்பட்டுச் சென்றார். முதல்வரின் சுற்றுப்பயணத்தால் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.


 



இந்நிலையில், சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விசாரணை ஆணைய தலைவர் ஆறுமுகசாமி இன்று நேரில் சந்தித்தார். அப்போது ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்பட்டது தொடர்பான 600 பக்கங்களை கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தார். 


மேலும் படிக்க | எச்.ராஜா போட்டியிட்டு தோல்வியடைந்த பதவியை கைப்பற்றிய அன்பில் மகேஷ்


அப்போது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த அறிக்கையானது ஐந்து வருடங்களுக்கு பிறகு முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | அமைச்சர் எ.வ.வேலு மக்களுக்கு கிளுகிளுப்பை காட்டி ஏமாற்றுகிறார்: ஜெயக்குமார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ