சென்னையில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரெயில் மேம்பாலம் பணிகள் முடிந்தன. அங்கு கடந்த ஆண்டு முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.


சின்னமலை - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரெயில் பாதை பணி கடந்த ஜூலை மாதம் முடிவடைந்தது. அந்த பாதையில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து சின்ன மலை - விமான நிலையம் இடையே  மெட்ரோ ரெயில்களை இயக்கலாம் என்று கடந்த மாதம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் வழங்கினார். 


இதையடுத்து சின்னமலை-விமான நிலையம் இடையே நாளை  முதல் மெட்ரோ  ரெயில் சேவை தொடங்குகிறது. இதற்கான விழா தலைமைச்செயலகத்திலும், விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்திலும் நாளை காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது.


தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்-அமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம்  சின்னமலை - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரெயில் பயணிகள் சேவையைத் தொடங்கி வைப்பார். 


மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி வெங்கையா நாயுடு, மத்திய சாலை போக்குவரத்து துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இருவரும் விழாவுக்கு முன்னிலை வகிப்பார்கள். 


மெட்ரோ  ரெயிலுக்கான கட்டணம்:-


  முதல் 2 கி.மீ  -  ரூ.10


2 முதல் 4 கி.மீ  - ரூ.20 


4 முதல் 6 கி.மீ.  - ரூ.30 


6 முதல் 8 கி.மீ  -  ரூ.40 


8 முதல் 10 கி.மீ -  ரூ.5௦ 


10 முதல் 15 கி.மீ-  ரூ.60.