ஜெயலலிதா போல போலி கையெழுத்து போட்டு மோசடி செய்வதாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு, ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா கடிதம் எழுதியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதா போல போலி கையெழுத்து போட்டு மோசடி செய்ய அவரை சுற்றியுள்ளவர்கள் சதி செய்து வருவதாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு, ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுகுறித்து ஆளுநருக்கு சசிகலா புஷ்பா எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:- ஜெயலலிதா போன்ற போலி கையெழுத்து மூலம் அதிமுகவுக்கு துணைப் பொதுச்செயலரை நியமிக்க சதி நடக்கிறது. முதல்வரின் கையெழுத்தை மோசடியாக பயன்படுத்த அவரை சுற்றியுள்ள கும்பல் முயற்சி செய்து வருகிறது. எனவே, அரசு நிர்வாகம் தொடர்பான கோப்புகள் ஆளுநரிடம் வரும்போது, அதில் முதல்வர் கையெழுத்து இருந்தால் நன்றாக பரிசீலிக்கவேண்டும், இவ்வாறு ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் சசிகலா புஷ்பா குறிப்பிட்டுள்ளார். 


சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 22-ம் தேதி சேர்க்கப்பட்டு, முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.