சாத்தான்குளம் (Sathankulam) தந்தை, மகன் கொலை வழக்கில் வரும் 11-ம் தேதி முதல் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்க உள்ளது என  சிபிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடி (Thoothukudi) மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் (Jayaraj Fenix) ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். 


 


ALSO READ | சாத்தான்குளத்தில் மீண்டும் போலீஸ் அராஜகம்: துன்புறுத்தல் தொடர்கிறது….


இந்நிலையில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அந்த 10 போலீசாரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. 


இதற்கிடையில் ரகு கணேஷ் மற்றும் முருகனின் ஜாமீன் மனுவை மெட்ராஸ் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் 130 நாட்கள் காவலில் இருந்ததாகவும், நீதிமன்றம் உத்தரவிட்ட சிபி-சிஐடி விசாரணை முடிந்துவிட்டதாகவும், அதற்கான ஆதாரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் சேகரித்ததாகவும் கூறி ஜாமீன் கோரினர். அவர்கள் ஜாமீன் மனுவில் அவர்கள் ஜாமீன் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவார்கள் என்றும் ஜாமீனில் விடுவிக்கப்படுவதைத் தவிர்ப்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


இந்த வழக்கில் ரகு கணேஷ் மற்றும் முருகன் இருவருமே பிரதான குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்றும், காவலில் இருந்த தந்தை மற்றும் மகனுக்கு வழங்கப்பட்ட மிருகத்தனமான, மனிதாபிமானமற்ற சித்திரவதைக்கு சிபிஐ வக்கீல் கூறியது. பிரதான குற்றவாளிகளை விடுவிப்பது வழக்கையும் அதன் முடிவுகளையும் பாதிக்கும் என்றும் மேலும் கூறப்பட்டது.  இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 11 ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தொடங்கப்படும் என்றும் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.


 


ALSO READ | சாத்தான்குளம் கொலை வழக்கு: மேலும் 3 போலீஸ்காரர்களை காவலில் எடுத்த சிபிஐ


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR