கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி அதிகாலை மூணு மணி அளவில் பிரபல ரவுடி சோட்டா வினோத் மற்றும் அவரது கூட்டாளி ரமேஷ் ஆகியோரை கூடுவாஞ்சேரி காவல்துறையினர், காவல் துறையினரை தாக்க வந்ததாக கூறி என்கவுண்டர் செய்தனர். இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த என்கவுண்டர் போலியானது எனவும், போலீசார் கூறுவது போல் வாகன சோதனையின் போது போலீசாரை தாக்கியதால் சுட்டுக் கொள்ளவில்லை எனவும் ரவுடி வினோத்தின் தாய் குற்றம் சாட்டினார். மேலும், இதை திட்டமிட்டு தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் செய்துள்ளார், சம்பவத்தன்று கொலையான இரு ரவுடிகளும் சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்ததாக தெரிவித்த அவர், போலீசார் அவர்களை அங்கிருந்து கைது செய்துகொண்டு வந்து கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் வைத்து சுட்டு கொன்று விட்டனர் என்றும் குற்றம்சாட்டினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஜோடிகளே உஷார்..! தனியார் விடுதியில் ரகசிய கேமரா-வசமாக சிக்கிய ஊழியர்!


போலீசார் கூறுவது போல தன்னுடைய மகன் போலீசாரை தாக்கவில்லை என திட்டவட்டமாக மறுத்த ரவுடி சோட்டா வினோத் தாய், இது குறித்து அமைக்கப்பட்டிருந்த விசாரணை கமிஷனிடமும் இதே வாக்குமூலத்தை அளித்திருந்தார். இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் வாராகி இது குறித்து தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் மீது தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார். நேற்றைக்கு முந்தைய தினம் இந்த புகார் ஆனது மனித உரிமை ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் மீது இந்த புகார் பதிவு செய்யப்பட்து குறித்த செய்திகள் வெளியானது.


இந்நிலையில் நேற்று இரவு பத்திரிகையாளர் வாராகி விசாரணை என்ற பெயரில் பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் மீது மசாஜ் சென்டர் உரிமையாளரை ரூபாய் 25 லட்சம் பணம் கேட்டதாகவும், இல்லையென்றால் கொலை செய்துவிடுவதாகவும் கூறி மிரட்டியதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் கார்த்திக் என்பவர் புகார் அளித்துள்ளார் என்று கூறி பத்திரிகையாளர் வாராகியை கைது செய்துள்ளனர் காவல்துறையினர். அவர் மீது Cr.No.763/23 U/S 341,386 IPC ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.



போலீசார் மீது மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்திருந்த பத்திரிக்கையாளர் மீது திடீரென்று எடுக்கப்பட்டிருக்கும் கைது நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு ஜனநாயக படுகொலை எனவும் இது ஒரு பழிவாங்கும் செயல் எனவும் காவல்துறையினர் மீது உள்ள குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் எடுத்து வைத்தால் இதுபோன்ற கைது நடவடிக்கைகள் தான் மிஞ்சுமோ? என பல்வேறு கேள்விகள் எழும்புவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.


மேலும் படிக்க | சென்னை: ரூ. 500 கள்ள நோட்டு கொடுத்து ஏமாற்ற நினைத்த முதியவர் - உஷாரான வியாபாரி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ