இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளது என்று விஜய் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.  2012-ல் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதில், 9 ஆண்டுகளுக்குப்பிறகு மனுவின் மீதான தீர்ப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. தீர்ப்பை வழங்கிய நீதிபதி, ரியல் ஹீரோக்களாக இருக்கவேண்டும் ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது என்று கடுமையாக சாடியதோடு, நடிகர் விஜய்யின் வரி விலக்குமனுவை தள்ளுபடி செய்தார். அதோடு,1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்த நீதிபதி, அபராதத் தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தவிட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ Rolls Royce tax case: நடிகர் விஜய்க்கு விதித்த அபராதத்திற்கு இடைக்கால தடை


இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் வந்தன. தீர்ப்பு வெளியாகி சில தினங்கள், தனது மனு மீதான தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, நடிகர் விஜய்  கடந்த ஜூலை 17ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். தனக்கு விதிக்கப்பட்ட 1 லட்சம் ரூபாய் அபாரதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், தன் மீதான விமர்சனங்களை தீர்ப்பில் இருந்து நீக்கவேண்டும் என்று விஜய் தனது மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்து இருந்தார்.  விஜய் மீதான விமர்சனங்களை நீக்குவது தொடர்பான விசாரணை நான்கு வாரங்களில் மேற்கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.  இந்நிலையில் மனு இன்று விசாரணைக்கு வந்தது.



நிலுவை வரித்தொகையான 32 லட்சத்து 30 ஆயிரத்தை ரூபாய் ஆகஸ்ட் 7ஆம் தேதி செலுத்திவிட்டோம்.   வழக்கு ஆவணங்களில் தொழிலை சொல்ல வேண்டிய அவசியமில்லை, நுழைவு வரி செலுத்தவில்லை என்றும்,  வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவதும் தேவையற்ற் கருத்துக்கள்.  கஷ்டப்பட்ட உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்து இருப்பது தேவையற்றது. 
தன்னை தேச விரோதியாக கூறுவது தவறு.  தன் வழக்கு மட்டும் அல்லாமல் நடிகர்கள் தனுஷ், சூர்யா வழக்கிலும் பொதுப்படையாக கருத்து தெரிவிக்கப்பட்டது என்று விஜய் தரப்பில் இன்று கூறப்பட்டது.


நீதிபதியின் கருத்துக்களை நீக்கக்கோரும் விஜய் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கபட்டுள்ளது. 


ALSO READ இதுவரை தாதாசாகேப் பால்கே விருது வென்றவர்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR