நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர், நில விற்பனை தொடர்பாக நடேசன் மற்றும் ராஜவேலு ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதனை விசாரித்த போலீசார், தவறான புகார் என வழக்கை முடித்து, நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வசந்தி வழக்குத் தொடர்ந்தார். அதில், மறுவிசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும், காவல்துறை அதை மதிக்கவில்லை எனக்கூறி மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வசந்தி தாக்கல் செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | விஜயை விமர்சித்த தனி நீதிபதியின் கருத்துகளை நீக்கியது ஐகோர்ட்!


இதன்பிறகு மறுவிசாரணை நடத்தப்பட்டது. அதில், சிவில் வழக்கு என்பதால் முடிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை  முடித்து வைத்த  தனி நீதிபதி வேல்முருகன், தற்போது காவல்துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் இருப்பதாக தெரிவித்தார். மேலும், 10 சதவீத காவல்துறை அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உள்ளதாகவும் அவர் கருத்துக் கூறினார். எனவே, ஊழல்வாதிகளான காவல்துறை அதிகாரிகளை களைய வேண்டும் என்றும், திறமையற்றவர்களுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டிய நேரம் இது என்றும் தனது உத்தரவில் தனி நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.


மேலும் படிக்க | அரசு ஊழியர்கள் வேலைநேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை!


இதனிடையே, தனி நீதிபதியின் இந்தக் கருத்துக்களை நீக்கக்கோரி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டிஜிபி சார்பில் ஆஜரான அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடிந்த பின்பு, வழக்கின் எல்லைக்கு அப்பாற்பட்டு தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் ஏற்புடையதல்ல என்று வாதிட்டார். உயிரைப் பணையம் வைத்து பணியாற்றக்கூடிய காவல்துறையினர் மத்தியில் இந்த கருத்துக்கள் மன உளைச்சலை  ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பிரதிவாதிகளாக இல்லாதவர்கள்  பற்றிய கருத்துக்களை ஒரு நீதிபதி தெரிவிக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட இரண்டு பேர் கொண்ட அமர்வு நீதிபதிகள், தனி நீதிபதியின் கருத்துக்களை நீக்கம் செய்து அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளனர்.


மேலும் படிக்க | அமெரிக்காவின் முதல் கறுப்பினப் பெண் நீதிபதி!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR