தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று கோமா நிலையில் இருந்த ஜஸ்டின் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந்தேதி மக்கள் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.


இதில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட கீழமுடிமண் கிராமத்தை சேர்ந்த ஷிப்பிங் கம்பெனி டிரைவர் ஜஸ்டின் மீது போலீஸ் நடத்திய தடியடியில், படுகாயமடைந்தார். இதனால் அவர் கோமா நிலையில் இருந்தார். 


இந்நிலையில் அரசு மருத்துவமனையிலிருந்த தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று இரவு பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட்  மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த ஜஸ்டின் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.