அரசியல் மற்றும் களப்பணியில் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிப்பதாக காங்கிரசை சேர்ந்த ஜோதிமணி எம்பி தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் மக்களுக்கு ஆதரவாக தொடர்ந்து தன் குரலை பதிவு செய்து வரும் ஜோதிமணி.  தற்போது இளைஞர்களுக்கு அரசியல் பயிற்சி அளிப்பதாக கூறியுள்ளார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்கள் பணியில் ஆர்வம் உள்ளவர்கள் தன்னுடன் இணைந்து பணியாற்றலாம் என்று கூறினார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 15 ஆண்டுகளுக்கு முன்பு இளம் அரசியல் தலைவர்களுக்கான பயணம் ஒன்றிற்காக அமெரிக்கா சென்றிருந்தேன். அங்கு  அமெரிக்காவின் இருபெரும் கட்சிகளான ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள்,செனட்டர்கள்,ஹவுஸ் ஆப் ரெப்ரசென்டேட்டிவ் என்று பலரோடு உரையாட வாய்ப்பு கிடைத்தது.  


அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகம் மற்றும் களப்பணிகளில்   ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இதுபோன்ற இண்டர்ன்ஷிப் வாய்ப்புகள் வழங்கப்படுவதைப் பார்த்தேன்.  அரசியல், அரசாங்கம், களப்பணிகள்,பல துறைகளில் பணியாற்றுபவர்களின் தொடர்பு, தங்கள் புதுமையான யோசனைகளை செயல்படுத்திப் பார்க்கும் வாய்ப்பு என்று இந்த வாய்ப்பு பல்வேறு வாயில்களை விரியத்திறப்பதை உணர்ந்தேன்.  



மேலும் அரசியல் தளத்தில்,மக்களோடு  பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு, இது போன்ற வாய்ப்புகள் ஒரு முதற்படியாகவும் அமைகின்றன.  இப்படி தொடங்கிய பலர் அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்று மக்கள் பிரதிநிதிகளாகவும் இருக்கின்றனர். அரசியலுக்கு வர விரும்பாமல் வேறு துறைகளில் பயணிக்க விரும்புவர்களுக்கும் இந்த வாய்ப்பு மிகச்சிறப்பான அனுபவங்களை அளிக்கிறது. 


மக்கள் பிரதிநிதிகளுக்கும், மாணவர்கள்,இளைஞர்களின் புதிய அணுகு முறைகளை, சிந்தனைகளை அறிந்து கொண்டு செயல்படுத்த இது ஒரு நல்வாய்ப்பு.  இந்த முயற்சி வெற்றியடைய உங்கள் அனைவரின் ஆதரவையும் கோருகிறேன். இதுதொடர்பாக உங்கள் மேலான கருத்துக்களையும் வரவேற்கிறேன் என்று கூறியிருந்தார்.


 



ஒரு மாதம் மூன்று மாதங்கள் ஆறு மாதங்கள் மற்றும் ஒரு வருடம் என பயிற்சி அளிக்கப்படும்.  மேலும் இதற்கான சான்றிதழும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.  அதுமட்டுமின்றி உணவு மற்றும் தங்கும் வசதி செய்து தரப்படும் எனவும் கூறியுள்ளார்.


ALSO READ பாஜகவிடம் இருந்து பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் - ஜோதிமணி எம்பி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR