பாஜகவிடம் இருந்து பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் - ஜோதிமணி எம்பி

பாஜகவிடம் இருந்து பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என ஜோதிமணி எம்பி கூறியுள்ளார்.

Last Updated : Sep 20, 2021, 04:29 PM IST
பாஜகவிடம் இருந்து பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் - ஜோதிமணி எம்பி

சமீபத்தில் பாஜகவை சேர்ந்த மாநில பொறுப்பாளர் ஒருவரின் பாலியல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.  பின்பு அவர் தாமாகவே முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.  அதனை தொடர்ந்து தற்போது கர்நாடாவை சேர்ந்த பாஜகவின் முன்னாள் முதல்வர் சதானந்தகவுடாவின் பாலியல் வீடியோ வைரலாகி வருகிறது. 

jothimani

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கூறிய காங்கிரஸ் எம்பி ஜோதிமணி,  தமிழகத்தில் பாலியல் பாஜகவின் கே டி ராகவன் பாலியல்வீடியோவைத் தொடர்ந்து கர்நாடக பாஜகவின் முன்னாள் முதல்வர் சதானந்தகவுடாவின் பாலியல் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் இன்னும் வெளிவராத பாஜகவின் 14 வீடியோக்கள் பாஜகவின் அதிகார அச்சுறுத்தலால் முடக்கப்பட்டிருக்கிறது.   இந்தியா முழுவதும்  பாலியல்பாஜக தலைவர்களின் பாலியல் குற்றங்களை தனிப்பட்ட பிரச்சினையாக கருத முடியாது.பாஜகவின் உள்ளும்,வெளியிலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடும்.அதனால் தான் குற்றவாளிகளை பாஜக தொடர்ந்து காப்பாற்றிவருகிறது. தமிழக மக்கள் பாஜகவிடம் எச்சரிக்கையொடு இருக்கவேண்டும்.

"உலகில் யாரும் செய்யாததையா சதானந்த கவுடா செய்துவிட்டார் "என்று எந்த நேரமும் பாஜகவின் பி டீம் திரு. சீமான் களத்தில் குதித்து பாஜகவை காப்பாற்றி கரை சேர்க்கவும் வாய்ப்பிருக்கிறது. நாம் தான் குறிப்பாக பெண்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். 

பாஜக பிரமுகர் குறித்த பாலியல் வீடியோ வெளியான போது தனது கண்டனத்தை அறிக்கை மூலம் வெளிப்படுத்தி இருந்தார் ஜோதிமணி.  பாஜக விற்கு ஆதரவாக சீமான் பேசிய போதும் தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.  

ALSO READ தனித்து களம் காணும் கட்சிகள்: சிதறும் வாக்கு வங்கி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News