அண்ணாமலை வாடகை தாயாக இருந்தே பழகியவர் - கி.வீரமணி!
டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டம் ரத்து என்ற அறிவிப்பு முதல் கட்ட வெற்றியாகும், உரிய நேரத்தில் எடுத்த நடவடிக்கைகள் தான் காரணம் - கி.வீரமணி!
தஞ்சையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி அறிவிப்பு பாராட்டு கூட்டம் மற்றும் எந்த திட்டத்தையும் ஒன்றிய அரசு நடைமுறைபடுத்தும்போது, மாநில அரசின் ஒத்திசைவோடு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே போராட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை.சந்திரசேகரன், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், திராவிடர் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும் படிக்க | சேட்டை செய்த டெலிவரி பாய்... பொங்கி எழுந்த சின்மயி - நடந்தது என்ன?
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டம் ரத்து என்ற அறிவிப்பு முதல் கட்ட வெற்றியாகும், தமிழ்நாடு முதலமைச்சர் உரிய நேரத்தில், உரிய வேகத்தில் எடுத்த நடவடிக்கைகள் தான் ஒன்றிய அரசின் இத்தகைய முடிவிற்க்கு காரணம் என்றார்.
இப்பிரச்சினையில் விவசாயிகள், அனைத்துக்கட்சியினர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், ஒன்றிய அரசு அதிகாரபூர்வை அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்றார். பாஜக தலைவர் அண்ணாமலை இந்த அறிவிப்பிற்க்கு தான் தான் காரணம் போல் காண்பித்துக் கொள்வது என்பது அவர் எப்போதும் வாடகை தாயாக இருந்தே பழகியவர் என்பதை காட்டுகிறது என்றார்.
மேலும் படிக்க | பாஜக கூட்டணிக்கு அண்ணாமலை போடும் கணக்கு: வாய்ப்பில்லை என சொன்ன செல்லூர் ராஜூ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ