Kalaingar Karunanidhi Pen Memorial: சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட உள்ள 'முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச்சின்னத்திற்கு' 15 நிபந்தனைகளுடன் தமிழக அரசின் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்திற்கு (CRZ) அனுமதி வழங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த இறுதி ஒப்புதலுடன், மாநில அரசு முன்மொழிவை செயல்படுத்துவதற்கான செயல்முறையைத் தொடங்கலாம் என தெரிகிறது. கடந்த ஜூன் 19ஆம் தேதி பொதுப்பணித்துறைக்கு அனுப்பிய கடிதத்தில், நிபுணர் மதிப்பீட்டுக் குழு மற்றும் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் CRZ அனுமதி வழங்கப்பட்டதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.


நிபந்தனைகளை அமல்படுத்துவது திருப்திகரமாக இல்லை என்றால் அமைச்சகம் அனுமதியை ரத்து செய்யலாம் அல்லது திட்டத்தை இடைநிறுத்தலாம் என்றும் அது குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் சுற்றுச்சூழல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் மற்றும் நிபந்தனைகளின் இணக்கம் பொதுப்பணித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெருமையை போற்றும் வகையில் 30 மீட்டர் உயரத்திலும், 8 ஆயிரத்து 551 சதுர மீட்டர் பரப்பளவிலும் இந்த பேனா நினைவுச்சின்னம் அமைக்க திட்ட முன்முடிவை தமிழ்நாடு அரசு முன்மொழிந்தது. இதில் பேனா பீடம், கடற்கரைக்கு மேலே உள்ள லேட்டிஸ் பாலம் மற்றும் கடலுக்கு மேலே நிலம் மற்றும் பாதசாரிகளுக்கான பாதை ஆகியவை அடங்கும். 7 மீட்டர் அகலம் கொண்ட இந்த பாலம் நிலத்தில் 290 மீட்டர் நீளமும், கடலுக்கு மேல் 360 மீட்டர் நீளமும் கொண்டதாக இருக்கும். 


மேலும் படிக்க | சுனாமி, கொரோனா வந்தாலும் விசாரிக்க முடியாது... செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது என்ன?


முக்கிய நிபந்தனைகள்


மத்திய அமைச்சகம் விதித்துள்ள சில நிபந்தனைகளை இங்கு காணலாம். 


- கட்டுமானத்திற்கு முன் திட்ட தளத்தில் இருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள ஐஎன்எஸ் அடையாரின் ஆட்சேபனை சான்றிதழ் பெற வேண்டும். 


- அரிப்பு மற்றும் திரட்டல் ஆய்வுகள் கண்காணிப்பு செய்யப்பட வேண்டும்.


- கூட்டத்தை நிர்வகித்தல் மற்றும் அவசரகால வெளியேற்றத் திட்டங்கள் பற்றிய அறிக்கைகள் பிராந்திய சுற்றுச்சூழல் அலுவலகத்திற்கு வழங்கப்பட வேண்டும்.


- நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தின் எந்த உத்தரவும் அல்லது வழிகாட்டுதலும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். 


- CRZ அனுமதி கடிதம் தேசிய பசுமை தீர்ப்பாயம், தெற்கு மண்டலத்தின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது ஆகியவை முக்கிய நிபந்தனைகளாகும்.


சென்னையைச் சேர்ந்த ஹூபர்ட் என்விரோ கேர் சிஸ்டம்ஸ் இந்த திட்டத்திற்கான உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆலோசகராக இருந்தது. அமைச்சகத்தின் ஒப்புதலின் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கையை பொதுப்பணித்துறை தயாரிக்கும் எனவும் கூறப்படுகிறது. 


வங்காள விரிகுடாவில் அமைக்கப்பட உள்ள இந்த நினைவுச்சின்னத்திற்கு வரவேற்பும், விமர்சனமும் ஒருங்கே உள்ளது. மக்களிடையே இத்திட்டம் குறித்து என்ன கருத்துகள் நிலவுகிறது என்பது சரியாக தெரியாவிட்டாலும், சீமான் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது - ஆர்எஸ்.பாரதி எச்சரிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ