இணையத்தை கலக்கும் கள்ளக்குறிச்சி பாய்ஸின் கானா பாடல்
கள்ளக்குறிச்சி மாவட்ட பிறந்த நாளில் கள்ளக்குறிச்சி பாய்ஸ் பாடிய கானா பாடலை பாடி இணையத்தை கலக்கி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து தமிழகத்தில் 34 வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமானது. 3 ஆண்டுகளுக்கு முன்பு உருவான இம்மாவட்டம், இப்போது நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பிறந்தநாள் விழா அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது.
மேலும் படிக்க | போதை பொருள் விற்பனையில் பாஜகவினர் - ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், மாவட்டத்தின் பிறந்தநாளுக்காக பிரத்யேகமாக பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். கள்ளக்குறிச்சி பாய்ஸ் எனும் தலைப்பில் அவர்கள் உருவாக்கியுள்ள பாடலில் மாவட்டத்தின் சிறப்புகள் மற்றும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. "கள்ளக்குறிச்சி ஏரியா நம்பி உள்ள வாரிய"என்ற தலைப்பில் அவர்கள் பாடலை எழுதியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், அந்த பாடலுக்கு ஏற்றவாறு காட்சிகள் பதிவு செய்யப்பட்டு நடனமும் ஆடியுள்ளனர். நவம்பர் 26 ஆம் தேதி மாவட்டம் உருவான நாளையொட்டி, அந்த இளைஞர்கள் படாலை ரிலீஸ் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி சிறப்பு மற்றும் நட்பை பற்றி சொல்லும் அந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. காவல்துறையினரும் இந்த பாடலுக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | உதயநிதிக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை! பின்வரிசையில் திமுக மூத்த அமைச்சர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR