கள்ளக்குறிச்சி சம்பவம்: மகளின் தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!
கள்ளக்குறிச்சி அருகே விஷம் கொடுத்து மகளை கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனையும் 15 ஆயிரம் அபாரதம் விதித்தும் கள்ளக்குறிச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!.
கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தை சுப்பிரமணியன் இவரது மனைவி பரமேஸ்வரி இவர்களுக்கு திருமணமாகி மூன்று குழந்தை உள்ளனர். இந்நிலையில் பரமேஸ்வரி கடந்த 2020 ஆண்டு தனது கணவருக்கு கடன் வாங்கி கொடுத்து அதை திரும்ப கொடுக்காததால் வாங்கிய இடத்தில் பணம் கொடுக்க முடியாமல் மன உளைச்சல் இருந்து வந்துள்ளார்.
மேலும் படிக்க | கண் கலங்க வைக்கும் கணவன் மனைவி பாசம்: நெட்டிசன்களை அழ வைத்த வைரல் வீடியோ
இந்நிலையில் பரமேஸ்வரி தனது 9 வயது மகள் கரிஷ்மாவிற்கு பூச்சிக்கொல்லி மருந்து கொடுத்து விட்டு தானும் குடித்துள்ளார். இதில் மகள் கரிஷ்மா இறந்த நிலையில் தாய் பரமேஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர்தப்பினார். இவ்வழக்கு கள்ளக்குறிச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று வழக்கினை விசாரித்த நீதிபதி கீதாராணி , மகளை விஷம் கொடுத்து கொலை செய்த பரமேஸ்வரிக்கு 15 ஆயிரம் அபராதமும் ஆயுள் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.
சமீபத்தில் தனது மகளை விட அதிக மதிப்பெண் எடுத்ததாக சக மாணவனை விஷம் கொடுத்து கொன்ற தாய் கைது செய்யப்பட்டு இருந்தார். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது இந்த தீர்ப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும் படிக்க | தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையை தொடங்கியது தேசிய புலனாய்வு முகமை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ