கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு குறித்து தமிழகத்தில் பல்வேறு தரப்புகளில் கண்டனங்களும் போராட்டங்களும் நடைபெற்ற வருகிறது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதிலும் அக்கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக முழுவதும் கள்ளக்குறிச்சியில் அரசின் மெத்தன போட்டு காரணமாகவே கள்ளச்சாராய உயிர் இழப்புக்கள் நடைபெற்றதாக குற்றம் சாட்டி இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி தினகரன் நூற்றுக்கு மேற்பட்ட தேமுதிகவினர் அதன் மாவட்ட செயலாளர் சோலை கனகராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரமாக நடந்த நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்காட்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய முக்கிய பொறுப்பாளர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Gleneagles Health City: புற்றுநோய் சிகிச்சையில் சாதனை படைத்த சென்னை தனியார் மருத்துவமனை!


கோவையில் ஆர்ப்பாட்டம்


கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கத்தவறிய திமும அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தேமுதிக கோவை ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்ப்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தேமுதிக-வினர் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பேரவை துணைச் செயலாளர் சக்திவேல், கள்ளக்குறிச்சி மட்டுமில்லாமல் விழுப்புரம் மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் குடித்து பல பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின், கனிமொழி,உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கள்ளச்சாரத்தை ஒழிப்போம் என்று பொய்யாக வாக்குறுதி குறித்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் ஸ்டாலின் ஆட்சியில் தான் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக விற்பனை ஆகி வருகிறது.


மேலும் கருணாநிதி ஆட்சி காலத்தில் இருந்து கள்ளக்குறிச்சியில் கள்ளச்சார இருக்கிறது. அமைச்சர் முத்துசாமி கள்ளச்சாராயம் மரணத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலகி கொண்டு ஆட்சியை ராஜினாமா செய்து பொது தேர்தலில் நிற்க வேண்டும். தமிழகத்தில் போதை இல்லாத மாநிலமாக முதல்வர் ஸ்டாலின் உருவாக்க வேண்டும் இல்லை என்றால் ஆட்சியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.


காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம்


காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க தவறிய ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியை கண்டித்து தேமுதிக-வினர் கருப்பு உடை அணிந்து ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக  சார்பில் காஞ்சிபுரம் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன்  மற்றும் காஞ்சிபுரம் மாநகர மாவட்ட செயலாளர் ஏகாம்பரம் ஆகியோரது தலைமையில் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரே  கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில கேப்டன் மன்ற செயலாளர் செல்வ அன்புராஜ் பங்கேற்று, கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் அருந்தி உயிர் இழந்த தமிழர்களுக்காகவும், தமிழர்களின் உயிரை பறித்த கையாலாகாத மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசை கண்டித்து  கண்டன உரையாற்றினார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி நிர்வாகிகள், மகளிர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கருப்பு உடை அணிந்துக்கொண்டும், கண்டன முழக்கங்களை எழுப்பியும், கைகளில் தேமுதிக கட்சி கொடிகளை ஏந்திக் கொண்டும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி விவகாரம் : 59பேர் உயிரிழப்பு.. தேமுதிகவினர் ஆர்பாட்டம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ