சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கு இன்று மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இன்று இந்த விவகாரத்தில் தீர்ப்பு வெளியாகி, மாணவியின் இறுதிச்சடங்குகள் இன்றாவது நடைபெறுமா என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மாணவியின் வீட்டின் அருகில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, இன்று இறுதிச்சடங்கு தொடர்பான முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரண வழக்கில் 3 மருத்துவர்கள் மற்றும் 1 ஓய்வு பெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற் கூராய்வு நடத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். அத்துடன் தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என மாணவியின் தந்தை தரப்பு விடுத்திருந்த கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சூழலில் கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து மாணவியின் மறு உடற்கூறாய்வு முடிந்தும் சடலத்தை வாங்க பெற்றோர் மறுத்து விட்டனர். சடலத்தை வாங்க பெற்றோருக்கு உத்தரவிடும்படி அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர், நீதிபதி சதீஷ்குமார் முன்பாக முறையீடு செய்தார். 


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வீட்டில் கட்டப்பட்ட பேனரால் பரபரப்பு


மாணவியின் தந்தையின் தரப்பிலும், நீதிபதியின் முன்னர் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இரு தரப்பு கோரிக்கைகளையும் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யப் போவதில்லை எனத் தெரிவித்த நீதிபதி, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி சதீஷ்குமார், விசாரணையை இன்று வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்தார்.


இந்த நிலையில், நேற்று மாணவியின் வீட்டிற்கு அருகில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சுவரொட்டியில், மாணவியின் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.



இன்று இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பின் அடிப்படையில், மாணவியின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்பதால் அனைவரின் கவனமும் நீதிமன்றத் தீர்ப்பின் மேல் உள்ளது. சடலத்த்தைப் பெற்றுக் கொள்ளுமாறு மாணவியின் வீட்டில் இரண்டு முறை நோட்டீஸ் ஒட்டப்பட்ட நிலையில் இன்று அவரது உடல் சொந்த ஊரான பெரிய நெசனூர் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


மேலும் படிக்க | இன்னும் மாணவியின் உடலை பெற்றோர் பெற்று கொள்ளவில்லை -தமிழக அரசு


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக வெளியான பகீர் தகவல்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ