கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு மாணவியின் தாய்தான் காரணம் - பள்ளி செயலாளரின் ஆவேச வீடியோ

கள்ளக்குறிச்சியில் இன்று நடந்த கலவரத்துக்கு உயிரிழந்த மாணவியின் தாய்தான் காரணமென்று சக்தி மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளியின் செயலாளர் பேசியிருக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 17, 2022, 05:39 PM IST
  • மாணவி ஸ்ரீமதி சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தார்
  • மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் குற்றச்சாட்டு
  • எங்கள் பக்கம் எந்த தவறுமில்லை என்று பள்ளி நிர்வாகம் விளக்கம்
 கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு மாணவியின் தாய்தான் காரணம் - பள்ளி செயலாளரின் ஆவேச வீடியோ title=

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கத்தின் மகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்தார்.

அவர் கடந்த 13ஆம் தேதி அதிகாலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உயிரிழந்த மாணவியின் உடலானது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. 

மேலும் படிக்க | kallakurichi: கள்ளக்குறிச்சி சின்னசேலம் நயினார்பாளையத்தில் ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு

உடற்கூராய்வு நடந்ததில், மாணவி ஸ்ரீமதி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்தன என்றும் தெரியவந்துள்ளது. 

Kallakurichi Violence

நிலைமை இப்படி இருக்க, தமது மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று மாணவியின் தாய் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்தச் சூழலில் இன்று காலை மாணவி உயிரிழந்ததற்கு  நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் சாலை மறியல் செய்தனர். 

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை - உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

அப்போது திடீரென போராட்டக்காரர்கள் காவல் துறையினர் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதில் போலீசார் பலர் காயம் அடைந்தனர். மேலும் அங்கிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டவுடன் காவல் துறையினர் துப்பாக்கிச்சூடும் நடத்தினர். கள்ளக்குறிச்சியில் நடந்த இந்தக் கலவரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Kallakurichi Violence

இந்நிலையில் மாணவி படித்த சக்தி மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளியின் செயலாளர் சாந்தி வெளியிட்டிருக்கும் வீடியோவில், “ஸ்ரீமதி விவகாரத்தில் அந்த மாணவி இறந்த நாளிலிருந்து இந்தநாள்வரை காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறோம்.

காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்ததால் மாணவியின் தாயை சந்திக்க முடியவில்லை. அதுதான் உண்மை. நிலைமை இப்படி இருக்க ஏன் பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்.

 

பள்ளியில் இருந்த வாகனங்கள் என்ன செய்தன. மாணவர்களுடைய சான்றிதழ்களை எரித்து சேதமாக்கிவிட்டார்கள். கள்ளக்குறிச்சியில் இன்று நடந்த கலவரத்துக்கு ஸ்ரீமதியின் தாய்தான் காரணம். 3000க்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கையை வீணடித்துவிட்டார்கள். மாணவியின் மரணத்தில் மர்மம் விலக வேண்டுமென்றால் ஸ்ரீமதி தாயின் ஃபோனை ட்ரேஸ் செய்ய வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News